படம் - பிரியா.
பெ: ஹேய்.. பாடல் ஒன்று ராகம் ஒன்று
தேடும் போது அந்த கீதம்
அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்
ஹோய் (பாடல்
ஆ: மின்னல் உந்தன் பெண்மை எனை தாக்கும் ஆயுதம்
மேகம் உந்தன் கூந்தல் மலர் ஆடும் ஊஞ்சலாம் ஹோய் ஹோய்
என் ஜோடிக் கிளியே கன்னல் தமிழே
தேனில் ஆடும் திராட்சை நீயே
(பாடல்)
பெ: தீபம் கொண்ட கண்கள் எனை நோக்கும் காதலில்
தாகம் கொண்ட நெஞ்சம்
எனை பார்க்கும் ஜாடையில் ஹோய் ஹோய்
இளம் காதல் ராஜா கண்ணா உந்தன்
நெஞ்சில் ஆடும் தேவி நானே
(பாடல்)
பெ: நேரம் இன்ப நேரம் விழி பாடும் ஓவியம்
ஆ: ஓரம் நெஞ்சின் ஓரம் சுவையாகும் காவியம்
பெ: ஒரு காலம் நேரம் கண்ணா உந்தன் மார்பில் ஆடும்
மாலை நானே ஹேய் பாடல் ஒன்று ராகம் ஒன்று
ஆ: சேரும் போது அந்த கீதம்
அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் ஹோய்
(பாடல்)
லலலால லலலால லலலா
லலலால லலலால லலலா
லலலால லலலால லலலாஆஆஆ
ரவிவர்மன் எழுதாத கலையோ
அஹஹா
ரதி தேவி வடிவான சிலையோ
அஹஹா
கவி ராஜன் எழுதாத கவியோ ஓஹோ
கரை போட்டு நடக்காத நதியோ
ஓஓஓஓ
ம்ம்ம்ம்
[ரவிவர்மன்...]
விழியோர சிறு பார்வை போதும்
நாம் விளையாடும் மைதானம் ஆகும்
இதழோர சிரிப்பொன்று போதும்
நான் இளைப்பாற மணப்பந்தலாகும்
கையேந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே
கருங்கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே
[ரவிவர்மன்...]
பூமாலையே உன்னை மணப்பேன்
புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்
மகராணி போலுன்னை மதிப்பேன்
உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்
என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்
அதுபோதுமே ஜீவன் அமைதி கொள்ளும்
[ரவிவர்மன்...]
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: K.J. யேசுதாஸ், சித்ரா
படம்: வசந்தி
தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு
மேனி எனும் வீணை மீட்டுகின்ற வேளை
மடியினில் உனை சேர்த்து
தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு
லலல லலலால் லலலல்ல லலல லலல்ல
லல்லலலல் லல்லலல்ல லாலா லா லா
இதுவரை உனை நானும்...ஆ ஆ ஆ ஆ
இளையவன் எனை நீயும்... ஆ ஆ ஆ ஆ
காணாமல் கூடாமல் எங்கேயோ வாழ்ந்தோம்
முதல் முதல் முகம் பார்த்து முழுவதும் உடல் வேர்த்து
நீராட போராட இந்நாளில் சேர்ந்தோம்
கல்யாணம் கச்சேரி கண்ணார எந்நாளில் காணலாம்
பொன்னூஞ்சல் பூப்பந்தல் வைபோகம் தைமாதம் மாலையிடு
தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு
இரவுகள் என்னை வாட்டும் இடையினில் அனல் மூட்டும்
நீயின்றி நான் இங்கு பாய் போடும் மாது
பிரிவுகள் இனியேது பிறவியில் கிடையாது
நீதானே நான் வந்து பூச்சூடும் மாது
அன்றாடம் பூங்காற்று உன் பேரை என் காதில் ஓதுது
எப்போது நான் வேண்டும் அப்போது பூங்காற்றை தூது விடு
தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு
மேனி எனும் வீணை மீட்டுகிற வேளை
மடியினில் உனை சேர்த்து
தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு
பாடல் : நான் தேடும் செவ்வந்தி பூவிது
படம் : தர்மபத்தினி (1986)
இசை : இளையராஜா
குரல் : இளையராஜா , ஜானகி
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பறந்து செல்ல வழி இல்லையோ… பருவக் குயில் தவிக்கிறதே…
சிறகிரண்டும் விரித்துவிட்டேன்… இளமை அது தடுக்கிறதே
பொன்மானே என் யோகம்தான்
பெண்தானோ சந்தேகம்தான்
என் தேவி… ஆஆஆ ஆஆஆ
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்…உன் கனி விழும் என தவம் கிடந்தேன்
பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு?
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
மங்கைக்குள் என்ன நிலவரமோ மஞ்சத்தில் விழும் நிலை வருமோ?
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ என்றைக்கும் அந்த சுகம் வருமோ?
தள்ளாடும் பெண்மேகம்தான்
என்னாளும் உன் வானம் நான்
என் தேவா ஆஆஆ ஆஆஆ
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்? என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது