தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டோடு இணைந்துஉத்தமம், தமிழ்நாடு, கோவையில் சூன் 23, 27 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
மாநாடு கருத்தரங்கம், சமுதாய குழுமம், கண்காட்சி ஆகிய மூன்று சிறப்புக் கூறுகளைக் கொண்ட முழு அளவிலான தமிழ் இணைய மாநாடாக உத்தமம் 2010 விளங்கும்.தமிழ் கணிணியம், பொதுவான தமிழ் இணையம் ஆகியவற்றின் அண்மைக்கால முன்னேற்றங்கள்,சவால்கள் குறித்து அலசி ஆராயும் தொழில் நுட்பக் குழுவாக மாநாட்டு அரங்குகள் விளங்கும்.
மேலதிக தகவல்களுக்கு http://www.infitt.org/
பதிவுகளுக்கு http://www.infitt.org/ti2010/register/
தமிழ் இணைய மாநாட்டில் தங்களது ஆய்வுக் கட்டுரையைப் படிக்க விரும்புவோர் ஒரு பக்க அளவிலான கட்டுரைச் சுருக்கத்தை ஆங்கிலத்திலோ தமிழிலோ தட்டச்சுச் செய்து கீழ்க்கண்ட விவரப்படி ti2010-cpc@infitt.org என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது முக்கிய நாட்கள் தங்களின் கவனத்திற்கு: கட்டுரைச் சுருக்கத்தினை அனுப்பி வைக்கவேண்டிய கடைசி நாள்: மார்ச்சு மாதம் பதினைந்தாம் நாள். முடிவு உங்களுக்கு வரும் நாள்: மார்ச்சு மாதம் முப்பதாம் நாள். உங்களுடைய முழுக்கட்டுரைக்கான கடைசி நாள்: ஏப்பிரல் மாதம் பதினைந்தாம் நாள். |