வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.
தமிழ் கணினியியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் கணினியியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அப்பிளின் iOS 7 இயங்கு தளத்தில் தமிழ் விசைப்பலகைககள் இரண்டு  சேர்க்கப்பட்டுள்ளதும் இங்கு நான் உட்பட எனது நண்பர்கள் இந்த வரவால் மிக மிக மகிழ்வுக்குள்ளாகியிருக்கின்றோம். காலத்தின் தேவை கருதிய அமைதியான புரட்சி என்று கருதுகின்றேன். நண்பர்கள் அஞ்சல் பலகை தெரிவு செய்வதைவிடவும் தமிழ் 99 ஒட்டிய மேற்படி இலகுபடுத்தப்பட்ட விசைப்பலகையினை தெரிவுசெய்வதை பெரிதும் விரும்புகிறார்கள்.

Tamil 99 விசைப்பலகை தான் ஆனால் "ஐ" கீழிறக்கப்பட்டுள்ளது. சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது .தட்டச்சு செய்யும்போது விசைப்பலகைகள்  மாற்றும் முறை பிடித்திருக்கிறது. பாமினி எழுத்துரு கட்டமைப்பில் ஆங்கில விசைப்பலகையில பழகியது மாற கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது அவ்வளவுதான். பழகும்வரை அஞ்சல் விசைப்பலகை கைகொடுக்கும்.

செயற்படுத்தும் முறை

Setting பகுதியில் General  இல் Keyboard என்ற பிரிவுக்கு சென்றுஅங்கு காணப்படும் Keyboards தெரிவில் சென்று , Add New Keyboard தெரிவு செய்ய வருகின்ற பட்டியலில் , Tamil என்பதை தெரிவுசெய்தால் சரி .அதன்பின்னர் வேண்டுமானால் இங்கு காணப்படக்கூடிய Tamil என்ற விசைப்பகையின் உட் சென்று  ”Tamil 99” என்பதுடன் Anjal விசைப்பலகையினையும் மேலதிகமாக சேர்த்துக்கொள்ள முடியும். என்னைப் பொறுத்தவரை Tamil 99 சிபார்சு செய்கின்றேன்.

தட்டச்சு  செய்யும்போது விசைப்பலகையினை  மாற்ற ”உலகம்”  பட விசையினை பயன்படுத்த வேண்டும். வடமொழி எழுத்துக்களை மற்றும் தமிழ் இலக்கங்களை ,ஸ்ரீ ,ஓம் , குறியீகளை பெற மேல்நோக்கிய அம்புக்குறி விசையினை (Shift) பயன்படுத்தலாம்.

”மீள்” என்ற விசை அடித்தவற்றை அழித்துவிடுவதை  என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது எமக்கு வசதியீனமாக உணர்கின்றேன். அடுத்த பதிப்பில் அதை மாற்றவேண்டும்.

இது சிறியவர்களிடத்தில் மொழிப்புலமையினை வளர்க்கவும் உச்சரிப்பு சார்ந்த எழுத்துக்கொலையினை தவிர்க்கவும் பெரிதும் உதவப்போகிறது. உடனடியான மெய் எழுத்து பிரயோகம் தவிர்கப்பட்டு குற்று இடுவதன் மூலம் மெய் எழுத்து உருவாக்கும் முறை கொண்டு வந்தது நல்லது. நேரடியான கொம்புகள் பிரயோகம்  நீக்கியதை வரவேற்கின்றேன். இனி ஒருவரும் தமிழினை அடித்துக்கொல்ல (:-) ) முடியாது.  மெய்யெழுத்துகளுடன் உயிர் எழுத்துக்கள் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டமையும் வரவேற்கத்தக்கது.

இதற்காக உழைத்தவர்களுக்கு நன்றி கூற வேண்டும். அப்பிள் நிறுவனத்திற்கு முதலில் நன்றிகள். அப்பிளின் தமிழ்ப்பதிப்பு என நாங்கள் கருதும் முத்து (:-) ) அவர்களுக்கும் நன்றி

Android சொதனங்களில் தமிழில் தட்டச்சு செய்ய
https://www.youtube.com/watch?v=QEDBSp3gxw8

உலகத்தமிழ் இணைய மாநாடு 2010

Posted by Thava சனி, 6 மார்ச், 2010 0 comments

தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டோடு இணைந்துஉத்தமம், தமிழ்நாடு, கோவையில் சூன் 23, 27 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

மாநாடு கருத்தரங்கம், சமுதாய குழுமம், கண்காட்சி ஆகிய மூன்று சிறப்புக் கூறுகளைக் கொண்ட முழு அளவிலான தமிழ் இணைய மாநாடாக உத்தமம் 2010 விளங்கும்.தமிழ் கணிணியம், பொதுவான தமிழ் இணையம் ஆகியவற்றின் அண்மைக்கால முன்னேற்றங்கள்,சவால்கள் குறித்து அலசி ஆராயும் தொழில் நுட்பக் குழுவாக மாநாட்டு அரங்குகள் விளங்கும்.


மேலதிக தகவல்களுக்கு http://www.infitt.org/
பதிவுகளுக்கு http://www.infitt.org/ti2010/register/

தமிழ் இணைய மாநாட்டில் தங்களது ஆய்வுக் கட்டுரையைப் படிக்க விரும்புவோர் ஒரு பக்க அளவிலான கட்டுரைச் சுருக்கத்தை ஆங்கிலத்திலோ தமிழிலோ தட்டச்சுச் செய்து கீழ்க்கண்ட விவரப்படி ti2010-cpc@infitt.org என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

முக்கிய நாட்கள் தங்களின் கவனத்திற்கு:
கட்டுரைச் சுருக்கத்தினை அனுப்பி வைக்கவேண்டிய கடைசி நாள்: மார்ச்சு மாதம் பதினைந்தாம் நாள்.
முடிவு உங்களுக்கு வரும் நாள்: மார்ச்சு மாதம் முப்பதாம் நாள்.
உங்களுடைய முழுக்கட்டுரைக்கான கடைசி நாள்:
ஏப்பிரல் மாதம் பதினைந்தாம் நாள்.

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Posted by Thava செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009 1 comments

Article Source: KMDFAIZAL

NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

  1. NHM Writer மென்பொருள் Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
  2. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.
  3. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
  4. வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.
  5. தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
  6. ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
  7. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
  8. இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.

NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?

NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.

எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.

Click here to download NHM Writer

image

உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.

பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

முதல் படி (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

2ஆம் படி (Step 2) இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

3ஆம் படி (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
image

4ஆம் படி (Step 4) இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

5ஆம் படி (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

6ஆம் படி (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்

image

பின்னர் மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.

image

NHM Writer யை எவ்வாறு பயன்படுத்துவது?

NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது மூலையில் மணி போன்ற image ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம். இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும்.

தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது?

நான் முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்யவும்.

image

தேர்வு செய்த பின்னர் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.

மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது?

NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

image

அதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் தெரியும். அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்னை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.

image

தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு அறிந்து கொள்வது?

முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த தமிழ் எழுத்து, தட்டச்சு பலகையில் எந்தெந்த பொத்தானில் உள்ளது? என்பதை அறிவது அவசியம்.

ஆகவே தான் உங்களுக்கு உதவியாக நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் கண் முன் அந்த தட்டச்சு பலகையின் விளக்கப்படம் கொண்டுவர NHM Writer உதவி புரிகின்றது. அதற்கு நீங்கள், மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் போதும். திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

image

அதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.

image

நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும்.

யா,ய்,யூ,யி,யீ போன்ற எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சு செய்வது?

எனக்கு தெரிந்தவரை தமிழில் தட்டச்சு செய்பவர்கள் ஆரம்பத்தில் பிரச்சனையாக கருதுவது மேற் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்களை தான். அவற்றை தட்டச்சு செய்ய NHM Writer, Key Preview என்ற எளிய வழியை ஏற்படுத்தி உள்ளது.

Key Preview என்ற திரையை பார்க்க மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

image

அதில் Key Preview என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்

image

உதாரணமாக நீங்கள் a என்ற ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் அதற்கு ”ய” என்ற தழிழ் எழுத்து உங்கள் திரையில் விழும். நீங்கள் அந்த ”ய” என்ற தழிழ் எழுத்தை ”ய்” என்றோ, அல்லது ”யா” என்றோ மாற்ற விரும்பினால் "a;" அல்லது ah என்று தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுக்கு உதவியாக கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.

image

நீங்கள் இதை பார்த்து, எந்த ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் என்ன தமிழ் எழுத்து வரும் என்பதை நன்றாக அறிந்து செய்ய முடியும்.

இனி உங்கள் தமிழ் தட்டச்சு, தமிழை போலவே இனிதாக இருக்கும்! வளர்க இனிய தமிழ் மற்றும் இணைய தமிழ்!!!

Article Source: KMDFAIZAL