மேற்படி நிகழ்வுக்கு செல்வதா விடுவதா, எனக்கு அது பொருத்தமானதா என்ற முடிவினை எடுப்பதற்கு முன்னால் Startup என்றால் என்ன என்று தெளிவு கொண்டிருக்க வேண்டியது அவசியம்.
இன்று அரசவேலைவாய்ப்பு என்பது அருகி வருகின்றது. பெரும்பாலான சேவைகள் தனியாரிடம் இருந்து தான் அரசாங்கத்திற்கு வழங்கப்படுகின்றன. நாம் இன்னும் பழைய மரபுகளை பேணுவதால் எமது பிராந்தியத்தின் பல தொழில் முயற்சிகள் உலகத்தரத்திற்கு மாற்றமடையாமல் இருக்கின்றன. அதனால் வளச்சுரண்டல்கள் அதிகரிக்கின்றது. இந்நிலையில் நாம் பிராந்தியத்தின் நலன் கருதியும் எமது எதிர்காலத்தினை வளப்படுத்துவதற்காகவும் வேலைவாய்பின்மையினை குறைப்பதற்காகவும் தொழில்முயற்சிகளை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம்.
#Startup என்றால் புதிதான ஒரு வணிக ரீதியான எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்தல் என்று பொருள்படும். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சுயதொழில் முயற்சியாளர்கள்(#Entrepreneur ) இணைந்து தம்மையும் தம் சார்ந்த பிரதேசத்தினதும் வளங்களை ஒருங்கிணைத்து ஒரு தொழில் முயற்சியினை எந்தத்துறைசார்ந்ததாயினும் ஆரம்பிக்கலாம். ஆனால் அதற்கு நாம் சில விடயங்களில் தெளிவாக இருக்கவேண்டும்.எந்த துறை என்றாலும் கேள்விகள் ஒரே மாதிரியானவையே
எந்த வகையான தேவை ஒன்றுக்கு நாம் வணிகரீதியிலான தீர்வினை வழங்கப்போகின்றோம்? அந்த தீர்வினால் இலாப மீட்ட முடியுமா? அது அவசியமானதா? ஆபத்தான பக்கவிளைவுகள் அற்றதா? அதற்கான சந்தை வாய்ப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எப்படி உள்ளது? அவ்வாறான முயற்சிகள் எதுவும் முன்னர் செய்யப்பட்டுள்ளதா? அல்லது அவ்வாறான தீர்வு வேறு தொழில் முயற்சிகளால் வழங்கப்படுகின்றதா? அது எமது நாட்டுக்கு பொருத்தமானதா? ஏற்கனவே உள்ளதாயின் அதில் உள்ள குறைபாடுகள் என்ன ? அதை எந்தவகையில் நிவர்த்தி செய்ய போகின்றோம்? எம்மிடம் குறித்த தீர்வினை வழங்குவதற்கான வளங்கள் உள்ளதா? அதற்கான குழுவான திறனுள்ள மனித வலு உள்ளதா என பல விடயங்களுக்கு விடை காண வேண்டிய தேவை இருக்கும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் ஒவ்வொரு வகையான Startup களின் வடிவங்களே. திட்டங்கள் எல்லோரிடம் இருக்கும் அதனை செய்ற்படுத்துவது சிலரே. தனித்து ஒருவரால் செய்ற்படுத்தமுடியாதவற்றை குழுவாக செயற்படுத்துவது இலகுவானதாக இருக்கும். அதற்குரிய சாரியான புரிந்துணர்வு உடன்படிக்கைகள் பங்குப்பகிர்வுகள் ஆவணரீதியாக செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதில் சிக்கல் இருக்கப்போவதில்லை.
வங்கி ஒன்றிடம் சென்று எமது முயற்சி ஒன்றுக்கு கடன் கோரும்போது நாம் அனைத்து ஆவணங்களையும் தயாரித்து வழங்கி நிற்போம் அதில் மேற்குறித்த கேள்விகளுக்குரிய பதில்கள் எம்மால் நியாயப்படுத்தப்பட்டிருக்கும் அப்படியிருந்தும் கூட அந்த கடன்வசதி வழங்கப்படுவது சாத்தியமற்றதாகவே இருப்பதுண்டு.
இந்த நிலையில் தான் உலகாளாவியரீதியில் நடைபெறும் அவ்வாறான Startup நிகழ்வுகள் எமக்கு பெரிய வரப்பிரசாதமாக இருக்கின்றன. இங்கே ஒன்று கூடுபவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் ஏற்கனவே தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி கண்டவர்களாவும்.புதிய தொழல்முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு சரியான வேறு குழுபங்களார்களை தேடுபவர்களாகவும் இருப்பர்.திறகை்கும் புத்தாக்கத்திற்கும் முன்னுரிமை கொடுப்பவர்களாகவும் இருப்பர்
பங்கு கொள்ளும் ஒருவர் தொழில்நுட்பவியலாளராக இருக்கலாம் ஒரு மருத்துவராக இருக்கலாம் ஒரு கணினிப்பொறியிலாளராக இருக்கலாம், ஒரு இலத்திரனியல் பொறியிலாளராக, ஒரு முதலீட்டாளராக இருக்கலாம். ஒரு சிறந்த வரைகலை வடிவமைப்பாளராக இருக்கலாம் ,ஒரு சிறந்த காணொளிகளை தயாரிக்கும் வல்லுனராக இருக்கலாம் ஒரு வன்பொருள் விநியோகத்தராக இருக்கலாம் ஒரு சிறந்த முகாமையாளராக இருக்கலாம் ஒரு சிறந்த கணக்காளராக இருக்கலாம் . ஒர சி்றந்த புறோகிராமராக இருக்கலாம், ஒரு சிறந்த கட்டிட கலைஞராக இருக்கலாம், சிறந்த தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கலாம்,ஒரு சிறந்த சந்தைப்படுத்துனராக கூட இருக்கலாம்.
அவர்களில் இருந்து உங்கள் தொழில் முயற்சிக்குரிய வளங்கள் பெற்றுக்கொள்ள முடிகிறது. அத்துடன் உங்கள் குழுவுக்கான வல்லுனர் உதவியும் கிடைக்கின்றது. வெற்றிபெற்றவர்களுடனான உறவை வலுப்படுத்த முடிகின்றது.
Startup Weekend என்பது Techstars அமைப்பினால் 3 நாள் நிகழ்வாக உலகளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்படுகின்ற Startup களுக்கான ஒன்று கூடல் நிகழ்வாகும் .Techstar அமைப்பானது Startup களில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கான நிதிவளங்களை பெறுபவதற்கு உதவுதல் , அவர்களுக்கு தேவையான வசதிகள் வல்லுனர் உதவிகளை ஒருங்கிணைத்துக்கொடுத்தல் . Startup களினை மேலும் அபிவிருத்தி செய்தல் முன்னேற்ற வேகத்தினை அதிகரித்தல் ஆகிய செயற்பாடுகளை செய்பவர்கள். அவர்கள் Google For Entrepreneurs அமைப்பின் பங்காளிகளிகளும் கூட
சகல பாகங்களில் இருந்தும் வரும் முன்னணி தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோர் ஏனைய துறை தொழில் முனைவோர் முதலீட்டாளர் தொழில்நுட்பவியலாளர் மாணவர் என சகலதுறைகளில் இருந்தும் கலந்துகொள்வர். வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கும் 3 தொழில் முனைவோர் வல்லுனர்களின் பேச்சுக்களும் இடம்பெறும் .Techstar சார்பாக அதன் பிரதிநிதி ஒருவர் வளவாளராக கலந்து கொள்வார்.
புதிய வணிக சிந்தனைகள் உங்கள் மனத்தில் ஓடுகின்றதா? அதற்கு தொழில்நுட்ப் உட்புகுத்தி செயல் வடிவம் கொடுக்கவேண்டும் என்று கருதுகின்றீர்களா? எதிர்காலத்தில் சிறந்த தகவல் தொழில்நுட்பத்துறை தொழில் முனைவோராக விரும்புகின்றீர்களா? நீங்கள் ஏற்கனவே தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் அதனை தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்த விரும்புகின்றீர்களா? ஏற்கனவே தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலென்ன ஈடுபட்டிராவிட்டாலென்ன தயக்கம் தேவையில்லை கலந்து கொள்ளலாம்.உங்களிடம் கருத்திட்டம் இல்லா விடினும் ஏனையவர்களின் கருத்திட்டத்தில் ஒரு குழுவில் இணைந்து பங்காற்றும் உங்கள் அனுபவ அறிவை பகிரந்துகொள்ள தயாரானவராயின் தயக்கம் வேண்டாம். வெற்றிகரமான Startup ஒன்றின் குழுப்பங்காளராக இருப்பது உங்களுக்கு நன்மையே. இவ்வாறான நிகழ்வுகளில் கிடைக்கும் திட்ட முன்மொழிவுகள் உங்கள் பாதையினை வெற்றியாக மாற்றிவிடும் சந்தர்ப்பங்களும் உண்டு.
கலந்து கொள்ள கட்டணம் உண்டு. 3 நாட்கள் விடுதியில் நிகழ்வை சிறப்பான முறையில் நடாத்துவதற்கும் அங்கு அனைவருக்கும் தேனீர் , சிற்றுண்டிகள், மதிய , இரவு உணவு வழங்குவதற்கும் செலவு உண்டல்லவா எனவே அவற்றினை கருத்தில் கட்டணம் உண்டு. தங்குமிட வசதி உங்களை பொறுத்தது. விடுதியில் தங்குவதாயின் சலுகை விலை உண்டு
இலங்கையில் முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்நிகழ்வு இலங்கையில் 5 இடங்களில் நடைபெற்றுள்ளது. 6வது நிகழ்வு மீண்டும் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.
Startup Weekend நிகழ்வில் என்ன நடைபெறும் என்று அறிந்து வைத்திருப்பது பங்கு கொள்ள விரும்புபவர்களுக்கு வசதியாக .இருக்கும்
1ம் நாள் (6.00pm -10pm)
கலந்துகொள்பவர்களிடம் இருந்து வாய்மொழி எண்ண முன்மொழிவுகள் பெறப்படும். பங்குபற்றுபவர்கள் தங்கள் சொந்த பேச்சு மொழியில் கருத்திட்டங்களை முன்மொழியலாம்.அவற்றில் கலந்து கொண்டுள்ளவர்களின் வாக்குகளுக்கு அமைய குறிப்பிட்ட Startup முன்மொழிவுகள் தெரிவு செய்யப்படும்.கலந்து கொள்பவர்கள் குழுக்களாக பிரிக்கப்படுவர். பங்குபற்றுபவர்கள் தங்களுக்கு விரும்பிய குழுங்களில் இணைந்துகொள்ளும் வாய்பினை பெறுவர். ஒவ்வொரு குழுவுக்கும் நேர அட்டவணையின் அடிப்படையில் நிபுணத்துவம் வாய்ந்த வளவாளர்கள் நியமிக்கப்படுவர். அவர்கள் குழுக்களுக்கான உரிய உதவிகளை வழங்குவார்கள்
2ம்நாள் (9am -10pm)
ஒவ்வொரு குழுக்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட Startup முன்மொழிவுகளை எவ்வாறு செயற்படுத்துவது அபிவிருத்தி செய்வது செய்து முடிப்பது என்பது தொடர்பில் திட்டங்களை தயாரிப்பர்.மிகக்குறைந்த அளவிலான நிலை வரை Startup மூலம் கொண்டுவரப்படவுள்ள வெளியீடு குறித்து மாதிரியை தயாரிப்பர். அதன்போது குழுவில் உள்ள ஒவ்வொரு தரப்பட்டவர்களும் தங்கள் தங்கள் உதவியினை வழங்குவர் 3ம் நாள் மாலை வரை அது தொடரும்
3ம் நாள் மாலை (9am -9pm)
ஒவ்வொரு குழுவினரும் தங்கள் Startup திட்டங்கள் தொடர்பில் 3-5 பேர் கொண்ட நடுவர்கள் மத்தியில் Presentation வழங்குவார்கள். இவர்களில் 3 குழு தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்படும்.மேலதிக உதவிகள் Techstar இனால் வழங்கப்படும். விருது பெறும் Startup கள் Startup Acceleration திட்டத்திற்கு தகுதிபெறும். ஏனைவவை மேம்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இங்கே கிடைக்கும்
எங்கே நுழைவுச்சீட்டினை பெறுவது?
1) http://go.startupweekend.org/Jaffna2017 (இணையவழி)
2) ஏற்பாட்டாளர்களிடம் நேரடியாகவும் பெறலாம்
3)முன்பதிவுகளுக்கு
பங்கு பற்றுபவர்களுக்கு கிடைக்கும் மேலதிக நன்மைகள் என்ன என்று பலரும் வினாவுகின்றனர். இவை தான் அந்த சலுகைகள்
மேலும் தகவல்களை இங்கு பெறலாம்
1)http://go.startupweekend.org/Jaffna2017
2)https://www.facebook.com/StartupWeekendLK
3) http://startupweekend.org/attendees

- Startup ஒன்றினை ஆரம்பிக்க சந்தர்ப்பம்.
- பல்வேறுதரப்பட்ட துறைசார்ந்தவர்களுடன் குழுவாக பணியாற்றும் அனுபவம்
- தொழில்முனைவோருடையான தொடர்புகள்
- புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு
- உலகளாவிய தொழில்முனைவோர் சமூகத்துடனான தொடர்புகளை ஏற்படுத்தல்
- முன்னணி Startup களுக்கு முதலீட்டாளர்களின் முதலீட்டு வசதிகள்
- – நிகழ்வின்போது பங்குபெறுபவர்களுக்கு அங்கு பயன்படுத்தFree Wifi வசதிவழங்கப்படும்
- – பங்குபற்றும் அனைவருக்கும் Google Cloud Platform இன் $300 பெறுமதியான சேவைகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம்
- – பங்குபற்றுபவர்களுக்கு இலவச .Co டொமைன் பெறும் சந்தர்ப்பம்