வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

இருண்ட யுகம் நோக்கி இவர்கள் போகின்றார்

Posted by Thava திங்கள், 28 செப்டம்பர், 2015 0 comments

இளைய சமுதாயம் எதன் பின்னால் எதற்காக அணி திரள்கிறது என்பதை நினைக்கையில் தாயகத்தின், எமது இனத்தின் விழுமியங்களின் மீதான எதிர்கால நிலை குறித்து கவலை மட்டுமல்ல கண்ணீரும் வருகின்றது !
இருண்ட யுகம் நோக்கி இவர்கள் போகின்றார்
சி்ங்கள தேசத்தில் சில நண்பர் பெற்றதற்காய்
எங்களை இவர்கள் ஏளனமாய் பார்க்கின்றார்
சிங்கள தேசத்தில் சீவித்த அனுபவம் எனக்குமுண்டு
உங்களை விட தாரளமாய் நண்பருண்டு!
உங்களை விட தாய் மீதும் தாயகத்தின் மீதும்
காயாத காதல் எனக்கும் உள்ளது-உங்களை
வழிநடாத்தும் சக்திகள் சிலவற்றை
கனவாக மட்டும் கண்டு கொள்ளலாம்.
* * *
புலம்பெயர்ந்து புதினம் பார்க்க வந்த ஒன்று எனக்கு 
”புறோட்டோகோல்” தெரியுமா என்கிறது !
கவனமாயிரும் என்று கட்டளையிடுகின்றது!
செல்லடியிலும் நான் நாட்டைவிட்டு செல்லாமல் வாழ்ந்தவன்!
வல்லமை எனக்கிருக்கு வாழ வழியிருக்கு
விசா‬ முடிய முதல் முந்தியோடபோறவன் என்னை
கூசா‬ துாக்க கூப்பிட முடியாது !
வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்