வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.
Technology லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Technology லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

#Techstar அமைப்பின் வணிக புத்தாக்குனர்களுக்கான Startup Weekend நிகழ்வு இலங்கையில் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஜூன் 24ம் திகதி மாலை 5.30 தெடாக்கம் 26ம் திகதி இரவு 9 மணிவரை யாழ் ரில்கோ விடுதியில்  நடாத்தப்படஉள்ளது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இலங்கைக்கான சர்வதேச தொழில்நுட்ப நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவது இதுவே முதற்தடவை.



மேற்படி நிகழ்வுக்கு செல்வதா விடுவதா, எனக்கு அது பொருத்தமானதா  என்ற முடிவினை எடுப்பதற்கு முன்னால் Startup என்றால் என்ன என்று தெளிவு கொண்டிருக்க வேண்டியது அவசியம்.

இன்று அரசவேலைவாய்ப்பு என்பது அருகி வருகின்றது. பெரும்பாலான சேவைகள் தனியாரிடம் இருந்து தான் அரசாங்கத்திற்கு வழங்கப்படுகின்றன. நாம் இன்னும் பழைய மரபுகளை பேணுவதால் எமது பிராந்தியத்தின் பல தொழில் முயற்சிகள் உலகத்தரத்திற்கு மாற்றமடையாமல் இருக்கின்றன. அதனால் வளச்சுரண்டல்கள் அதிகரிக்கின்றது. இந்நிலையில் நாம் பிராந்தியத்தின் நலன் கருதியும் எமது எதிர்காலத்தினை வளப்படுத்துவதற்காகவும் வேலைவாய்பின்மையினை குறைப்பதற்காகவும் தொழில்முயற்சிகளை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம்.

#Startup என்றால் புதிதான ஒரு வணிக ரீதியான எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்தல் என்று பொருள்படும். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட  சுயதொழில் முயற்சியாளர்கள்(#Entrepreneur ) இணைந்து தம்மையும் தம் சார்ந்த பிரதேசத்தினதும் வளங்களை ஒருங்கிணைத்து ஒரு தொழில் முயற்சியினை எந்தத்துறைசார்ந்ததாயினும் ஆரம்பிக்கலாம். ஆனால் அதற்கு நாம் சில விடயங்களில் தெளிவாக இருக்கவேண்டும்.எந்த துறை என்றாலும் கேள்விகள் ஒரே மாதிரியானவையே

எந்த வகையான தேவை ஒன்றுக்கு நாம் வணிகரீதியிலான தீர்வினை வழங்கப்போகின்றோம்? அந்த தீர்வினால் இலாப மீட்ட முடியுமா? அது அவசியமானதா? ஆபத்தான பக்கவிளைவுகள் அற்றதா? அதற்கான சந்தை வாய்ப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எப்படி உள்ளது? அவ்வாறான முயற்சிகள் எதுவும் முன்னர் செய்யப்பட்டுள்ளதா? அல்லது அவ்வாறான தீர்வு வேறு தொழில் முயற்சிகளால் வழங்கப்படுகின்றதா? அது எமது நாட்டுக்கு பொருத்தமானதா? ஏற்கனவே உள்ளதாயின் அதில் உள்ள குறைபாடுகள் என்ன ? அதை எந்தவகையில் நிவர்த்தி செய்ய போகின்றோம்? எம்மிடம் குறித்த தீர்வினை வழங்குவதற்கான வளங்கள் உள்ளதா? அதற்கான குழுவான திறனுள்ள மனித வலு உள்ளதா என பல விடயங்களுக்கு விடை காண வேண்டிய தேவை இருக்கும்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் ஒவ்வொரு வகையான Startup களின் வடிவங்களே. திட்டங்கள் எல்லோரிடம் இருக்கும் அதனை செய்ற்படுத்துவது சிலரே. தனித்து ஒருவரால் செய்ற்படுத்தமுடியாதவற்றை குழுவாக செயற்படுத்துவது இலகுவானதாக இருக்கும். அதற்குரிய சாரியான புரிந்துணர்வு உடன்படிக்கைகள் பங்குப்பகிர்வுகள் ஆவணரீதியாக செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதில் சிக்கல் இருக்கப்போவதில்லை.

வங்கி ஒன்றிடம் சென்று எமது முயற்சி ஒன்றுக்கு கடன் கோரும்போது நாம் அனைத்து ஆவணங்களையும் தயாரித்து வழங்கி நிற்போம் அதில் மேற்குறித்த கேள்விகளுக்குரிய பதில்கள் எம்மால் நியாயப்படுத்தப்பட்டிருக்கும் அப்படியிருந்தும் கூட அந்த கடன்வசதி வழங்கப்படுவது சாத்தியமற்றதாகவே இருப்பதுண்டு.

இந்த நிலையில் தான் உலகாளாவியரீதியில் நடைபெறும் அவ்வாறான Startup நிகழ்வுகள் எமக்கு பெரிய வரப்பிரசாதமாக இருக்கின்றன. இங்கே ஒன்று கூடுபவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் ஏற்கனவே தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி கண்டவர்களாவும்.புதிய தொழல்முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு சரியான வேறு குழுபங்களார்களை தேடுபவர்களாகவும் இருப்பர்.திறகை்கும் புத்தாக்கத்திற்கும் முன்னுரிமை கொடுப்பவர்களாகவும் இருப்பர்

பங்கு கொள்ளும் ஒருவர் தொழில்நுட்பவியலாளராக இருக்கலாம் ஒரு மருத்துவராக இருக்கலாம் ஒரு கணினிப்பொறியிலாளராக இருக்கலாம், ஒரு இலத்திரனியல் பொறியிலாளராக, ஒரு முதலீட்டாளராக இருக்கலாம். ஒரு சிறந்த வரைகலை வடிவமைப்பாளராக இருக்கலாம்  ,ஒரு சிறந்த காணொளிகளை தயாரிக்கும் வல்லுனராக இருக்கலாம் ஒரு வன்பொருள் விநியோகத்தராக இருக்கலாம் ஒரு சிறந்த முகாமையாளராக இருக்கலாம் ஒரு சிறந்த கணக்காளராக இருக்கலாம் . ஒர சி்றந்த புறோகிராமராக இருக்கலாம், ஒரு சிறந்த கட்டிட கலைஞராக இருக்கலாம், சிறந்த தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கலாம்,ஒரு சிறந்த சந்தைப்படுத்துனராக கூட இருக்கலாம்.


அவர்களில் இருந்து உங்கள் தொழில் முயற்சிக்குரிய வளங்கள் பெற்றுக்கொள்ள முடிகிறது. அத்துடன் உங்கள் குழுவுக்கான வல்லுனர் உதவியும் கிடைக்கின்றது. வெற்றிபெற்றவர்களுடனான உறவை வலுப்படுத்த முடிகின்றது.


Startup Weekend என்பது Techstars அமைப்பினால் 3 நாள் நிகழ்வாக உலகளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்படுகின்ற Startup களுக்கான ஒன்று கூடல் நிகழ்வாகும் .Techstar அமைப்பானது Startup களில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கான நிதிவளங்களை பெறுபவதற்கு உதவுதல் , அவர்களுக்கு தேவையான வசதிகள் வல்லுனர் உதவிகளை ஒருங்கிணைத்துக்கொடுத்தல் . Startup களினை மேலும் அபிவிருத்தி செய்தல் முன்னேற்ற வேகத்தினை அதிகரித்தல் ஆகிய செயற்பாடுகளை செய்பவர்கள். அவர்கள் Google For Entrepreneurs அமைப்பின் பங்காளிகளிகளும் கூட

இலங்கையில் Startup Weekend முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படுகின்றது. அதனை நடாத்துவதற்கு முனைந்த ஏற்பாட்டாளர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தினை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது முயற்சியால் இது சாத்தியமானது. இந்த நிகழ்வின் முன்னணி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சரண்யன் சர்மா முன்பே வெளிநாட்டில் அவ்வாறானதொரு நிகழ்வில் பங்கெடுத்திருந்தமையால் இதனை இலங்கைக்கு கொண்டுவரவேண்டும் என்று அவா கொண்டிருந்தார் இந்நிலையில் அண்மையில் உதயமாகிய  வடமாகாண தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறை சம்மேளனத்தின்(NCIT)  இயக்குனர் சபையின் முதலாவது கூட்டத்தில் இயக்குனர் சபையில் ஒருவரும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த சுயதொழில் முயற்சியாளருமான ”சரண்யன்” அவர்களால் இந்த நிகழ்வை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக எடுத்த முயற்சி உத்வேகம் பெற்றது.  அதன்பின் NCIT அமைப்பின் இயக்குனர் சபையில் இருந்து தவரூபன் , பிரசாந்தன் ஆகியோர் ஏற்பாட்டுக்குழுவுக்குள் உள்வாங்கப்பட்டனர்.

அந்த அமைப்பின் உருவாக்கத்தின் பின்னணியில் ஒரு சர்வதேச நிகழ்வினை நடாத்தவேண்டும் என்ற கருத்து பிரஸ்தாபிக்கப்பட்டவேளையில் அதை சரண்யனின் மேற்படி முயற்சியினை வெற்றிகரமாக்குவதன் மூலம் நடாத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. சில வருடங்களுக்கு முன்னர் ICTA அமைப்பினால் இந்நிகழ்வு நடாத்தப்பட முயற்சி எடுக்கப்பட்டிருந்த வேளையிலும் அது வெற்றியளித்திருந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது  ICTA , FITIS ,Slasscom, ISOC இலங்கை ஆகிய அமைப்புக்களும் இணைந்து இந்த நிகழ்வுக்கு பங்களிப்புக்களை வழங்கிவருகின்றன.

இது இலங்கைக்கான முதலாவது சர்வதேச Startup நிகழ்வு என்ற நிலையில் இதனை ஏன் யாழ்ப்பாணத்தில் நடாத்தவேண்டும் என்ற வாதப்பிரதிவாதங்களுக்கு இடையில் போரினால் பாதிக்கப்பட்டிருந்து மீண்டெழும் நகரங்களில் ஒன்றானதும் இலங்கையின் முன்னணி நகரங்களில் ஒன்றானதுமான யாழ்ப்பாணத்தில் இந்நிகழ்வை நடாத்துவது அந்த பிராந்தியத்தில்  Startup கலாச்சாரத்தினை வளர்த்து புதிய தொழில்முயற்சிகளைஆரம்பிப்பதற்கும்  வழிவகுக்கும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதனால் அதற்கான அனுமதி கிடைத்திருந்தது. எதிர்காலத்தில் இந்த நிகழ்வு இலங்கை முழுவதும் முக்கிய நகரங்களில் நடாத்துவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. இலங்கையின் முதன் நிகழ்வு என்பதால் ஆரம்பமே அமர்க்களமாக நடாத்துவது நல்லது என்று ஏற்பாட்டுக்குழு முடிவுசெய்து நிகழ்வு நாளை நெருங்கிக்கொண்டுள்ளது.

இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் வரும் முன்னணி தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோர் ஏனைய துறை தொழில் முனைவோர் முதலீட்டாளர் தொழில்நுட்பவியலாளர் மாணவர் என சகலதுறைகளில் இருந்தும் 100 பேர்வரையில் கலந்துகொள்வர். வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கும் 3 தொழில் முனைவோர் வல்லுனர்களின் பேச்சுக்களும் இடம்பெறுகிறது .Techstar சார்பாக அதன் ஆசிய பிராந்திய பிரதிநிதி ”அனுராக்” கலந்துகொள்கிறார்.

புதிய வணிக சிந்தனைகள் உங்கள் மனத்தில் ஓடுகின்றதா? அதற்கு தொழில்நுட்ப் உட்புகுத்தி செயல் வடிவம் கொடுக்கவேண்டும் என்று கருதுகின்றீர்களா? எதிர்காலத்தில் சிறந்த தகவல் தொழில்நுட்பத்துறை தொழில் முனைவோராக விரும்புகின்றீர்களா? நீங்கள் ஏற்கனவே தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் அதனை தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்த விரும்புகின்றீர்களா? ஏற்கனவே தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலென்ன ஈடுபட்டிராவிட்டாலென்ன தயக்கம் தேவையில்லை கலந்து கொள்ளலாம்.உங்களிடம் கருத்திட்டம் இல்லா விடினும் ஏனையவர்களின் கருத்திட்டத்தில் ஒரு குழுவில் இணைந்து பங்காற்றும் உங்கள் அனுபவ அறிவை பகிரந்துகொள்ள தயாரானவராயின் தயக்கம் வேண்டாம். வெற்றிகரமான Startup ஒன்றின் குழுப்பங்காளராக இருப்பது உங்களுக்கு நன்மையே. இவ்வாறான நிகழ்வுகளில் கிடைக்கும் திட்ட முன்மொழிவுகள் உங்கள் பாதையினை வெற்றியாக மாற்றிவிடும் சந்தர்ப்பங்களும் உண்டு.


கலந்து கொள்ள கட்டணம் உண்டு. 3 நாட்கள் விடுதியில் நிகழ்வை சிறப்பான முறையில் நடாத்துவதற்கும் அங்கு அனைவருக்கும் தேனீர் , சிற்றுண்டிகள், மதிய , இரவு உணவு வழங்குவதற்கும் செலவு உண்டல்லவா எனவே அவற்றினை கருத்தில் கட்டணம் உண்டு. தங்குமிட வசதி உங்களை பொறுத்தது. விடுதியில் தங்குவதாயின் சலுகை விலை உண்டு

தற்போதைய கட்டணவிபரம் 50$ ஆகும் (இலங்கை ரூபா 7500/- ). மாணவர்களுக்கு 50% கழிவுடன் விசேட சலுகை விலை உண்டு.அதே வேளை இறுதி நாள் நிகழ்வுக்கு மட்டும் கலந்து கொள்ள கட்டணம் 20$( 3000 ரூ) . அமைப்பு ரீதியான குழுக்கொள்வனவுக்கு சலுகை உண்டு. ஏற்பாட்டாளர்களுடன் ( 0777 563213 ) தொடர்பு கொள்ளவும். 100 பேருக்குத்தான் இட ஒதுக்கீடு செய்யப்படமுடியும் எனவே முன்கூட்டியே உங்கள் நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்

Startup Weekend நிகழ்வில் என்ன நடைபெறும் என்று அறிந்து வைத்திருப்பது பங்கு கொள்ள விரும்புபவர்களுக்கு வசதியாக .இருக்கும்


1ம் நாள் (5.30pm -10pm)
கலந்துகொள்பவர்களிடம் இருந்து வாய்மொழி எண்ண முன்மொழிவுகள் பெறப்படும். பங்குபற்றுபவர்கள் தங்கள் சொந்த பேச்சு மொழியில் கருத்திட்டங்களை முன்மொழியலாம்.அவற்றில் கலந்து கொண்டுள்ளவர்களின் வாக்குகளுக்கு அமைய 10 Startup முன்மொழிவுகள் தெரிவு செய்யப்படும்.கலந்து கொள்பவர்கள் 10 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்படுவர். பங்குபற்றுபவர்கள் தங்களுக்கு விரும்பிய குழுங்களில் இணைந்துகொள்ளும் வாய்பினை பெறுவர். ஒவ்வொரு குழுவுக்கும் குறைந்தது ஒவ்வொரு நிபுணத்துவம் வாய்ந்த வளவாளர்கள் நியமிக்கப்படுவர். அவர்கள் குழுக்களுக்கான உரிய உதவிகளை வழங்குவார்கள்

2ம்நாள் (9am -10pm)
ஒவ்வொரு குழுக்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட Startup முன்மொழிவுகளை எவ்வாறு செயற்படுத்துவது அபிவிருத்தி செய்வது செய்து முடிப்பது என்பது தொடர்பில் திட்டங்களை தயாரிப்பர்.மிகக்குறைந்த அளவிலான நிலை வரை Startup மூலம் கொண்டுவரப்படவுள்ள வெளியீடு குறித்து மாதிரியை தயாரிப்பர். அதன்போது குழுவில் உள்ள ஒவ்வொரு தரப்பட்டவர்களும் தங்கள் தங்கள் உதவியினை வழங்குவர்  3ம் நாள் மாலை வரை அது தொடரும்

3ம் நாள் மாலை (9am -9pm)
10 குழுவினரும் தங்கள் Startup திட்டங்கள் தொடர்பில் 3 பேர் கொண்ட நடுவர்கள் மத்தியில் Presentation வழங்குவார்கள். இவர்களில் 3 குழு தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்படும்.மேலதிக உதவிகள் Techstar இனால் வழங்கப்படும். விருது பெறும் Startup கள் Startup Acceleration திட்டத்திற்கு தகுதிபெறும். ஏனைவவை மேம்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இங்கே கிடைக்கும்

எங்கே நுழைவுச்சீட்டினை பெறுவது?
1)https://startupweekend.org/locations/asia/lk (இணையவழி)
2) ஏற்பாட்டாளர்களிடம் நேரடியாகவும் பெறலாம்


பங்கு பற்றுபவர்களுக்கு கிடைக்கும் மேலதிக நன்மைகள் என்ன என்று பலரும் வினாவுகின்றனர். இவை தான் அந்த சலுகைகள்

  1. Startup ஒன்றினை  ஆரம்பிக்க சந்தர்ப்பம்.
  2. பல்வேறுதரப்பட்ட துறைசார்ந்தவர்களுடன் குழுவாக பணியாற்றும் அனுபவம்
  3. தொழில்முனைவோருடையான தொடர்புகள்
  4. புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு
  5. உலகளாவிய தொழில்முனைவோர் சமூகத்துடனான தொடர்புகளை ஏற்படுத்தல்
  6. முன்னணி Startup களுக்கு முதலீட்டாளர்களின் முதலீட்டு வசதிகள்
  7. – பங்குகொள்ளும் அனைவருக்கும் LK Domain Registry ஒருவருடத்திற்கான இணையத்தளபதிவு  Hosting ஆகியவற்றை இலவசமாக வழங்கும்
  8. – நிகழ்வின்போது SLT நிறுவனம் பங்குபெறுபவர்களுக்கு அங்கு பயன்படுத்தFree Wifi வசதியை வழங்கும்
  9. – பங்குபற்றும் அனைவருக்கும் Google Cloud Platform இன் $300 பெறுமதியான சேவைகளை  பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம்
  10. – பங்குபற்றுபவர்களுக்கு இலவச .Co டொமைன் பெறும் சந்தர்ப்பம்

மேலும் தகவல்களை இங்கு பெறலாம்
1)http://up.co/communities/events/9140
2)https://www.facebook.com/StartupWeekendLK
3) http://startupweekend.org/attendees
4) http://www.ncit.lk



முகப்புத்தகத்தின் புள்ளி விபரப்பகுதிக்குள் சென்ற போது அதிகமாக பயன்படுத்தும் முகப்புத்தக பாவனையாளர் தொடர்பிலான முழு புள்ளிவிபரங்களும் பெறக்கூடியதாக இருந்தது. இன்றைய நிலவரப்படி இலங்கையில் 20 லட்சம்  தொடக்கம் 30 லட்சம் வரையிலான மாதாந்த பாவனையாளர்கள் காணப்படுகின்றனர்.அதில் 30 வீதம் மட்டுமே பெண்கள் 70 வீதமானவர்கள் ஆண்கள்.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 25 ஆயிரம் வரையிலான செயற்படுநிலை பயனாளர்கள் உள்ளனர்.கிளிநொச்சியில் 6 ஆயிரம் வரையிலும் முல்லைத்தீவில் 2 ஆயிரம் வரையிலும் மன்னாரில் 7000 வரையிலும் வவுனியாவில் 15 ஆயிரம் வரையிலும்
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் 30 ஆயிரம் வரையிலும் திருகோணமலையில்  25 ஆயிரம் வரையிலும் அம்பாறையில் 10 ஆயிரம் வரையிலும்  செயற்படு பாவனையாளர் உள்ளனர்

இலங்கையில் பாவனையாளர்களில் 57 வீதம் திருமணமாகாதவர்கள் 29 வீதம் திருமணமானவர்கள்

இலங்கையில் பயனாளர்களில் 80 வீதமானவர்கள் பல்கலைக்கல்வி பெற்றவர்கள் அல்லது பெற்றுக்கொண்டிருப்பவரகள்

உலகளாவியரீதியில் 1 பில்லியனுக்கும் அதிகமான செயற்படுநிலை (Active) பாவனையாளர்கள் இருக்கின்றனர் அவர்களில்  55 வீதம் ஆண்கள் 45 வீதம் பெண்கள்

மொத்த மாதாந்த செயற்படு நிலை பாவனையாளரில் 0.2 வீதமானவர்களே இலங்கையர் முதலாவது இடத்தில் அமெரிக்காவும்(14%)  இரண்டாவது இடத்தில் இந்தியாவும்(9%) இருக்கின்றது .

இந்தியாவில் 150 மில்லியன் வரையிலான பயனாளர்கள் உள்ளனர்.(24 வீதம் பெண்கள் 76 வீதம் ஆண்கள்) தமிழ்நாட்டில் 10 மில்லியன் வரையிலான பயனர்கள் உள்ளனர் அதிலும் சென்னையில் 4.5 மில்லியன் வரையிலான பயனர்கள் உள்ளனர் சென்னைக்கு (53%) அடுத்தபடியாக கோயம்புத்தூரிலும்(9%) அடுத்த மதுரை (4%) சேலத்திலும் (3%) உள்ளனர்





(21-02-2011 யாழ் உதயன்பத்திரிகையின் 14ம் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த விளம்பரத்தினை பார்த்ததும் ஏற்பட்ட உந்துதலால் என்னால் அன்றிரவு வரையப்பட்ட கட்டுரை)

ஏமாற்றுவதற்குப் பல வழிகள். அதுபோல ஏமாறுவதற்கும் பல வழிகள் இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பம் நமக்குத் தந்து கொண்டிருக்கும் நன்மைகள் ஏராளம். அதே போல் அதனால் நமக்கு ஏற்படுகின்ற தீமைகளும் ஏராளம். எதனையும் பகுத்தறிந்து நல்லவற்றுக்காக பயன்படுத்த முனைவதே அறிவுள்ள மனிதனுக்கு அழகு.நாம் நீண்டதொரு போராட்டக்களத்திலிருந்து சற்று விலகி புதிய பாதையில் காலடி வைத்திருக்கின்றோம்.

இந்நிலையில் எமது எண்ணங்கள், செயற்பாடுகள் யாவும் எமது எதிர்காலம் வளமான வாழ்வு மகிழ்ச்சியாயிருத்தல் ஆகிய விடயங்களை நாடிச்செல்வது இயல்பே. இந்நிலையில் பல வேளைகளில் செய்ய முற்படும் விடயங்களது நன்மை, தீமைகள் அல்லது அதன் வெளியீட்டு விளைவின் இறுதி வடிவம் பற்றிய சரியான புரிதல் நம்மிடத்தில் ஏற்படுவதற்கு எமது சிற்றறிவு தடைபோட்டு விடுகிறது. அதனது விளைவுகள் தான் சமூக கலாசார சீரழிவுகள் மற்றும் பிழையான வழிமுறைகளில் செல்வதன் மூலமான உடல் உள சொத்து இழப்புக்கள் எனலாம்.

நம்மில் பலருக்கு கணினி, இன்ரநெற், கைத்தொலைபேசி, கமெரா இவையெல்லாம் கடவுளாகத் தெரிகின்றன. அதனைப் பயன்படுத்துபவர்களையும் அறிமுகப்படுத்துபவர்களையும் சிலவேளைகளில் கடவுளின் தூதர்களாகவும் கருதத் தலைப்படுகின்றோம். இங்கு தான் நாம் தவறு செய்து விடுகின்றோம். எந்தவொரு செயற்பாட்டினையும் செய்ய முன்னரும் அதனால் விளையப் போகின்ற நன்மைகளுக்கு அப்பால் விளையக் கூடிய தீமைகள் பற்றியும் ஓரளவுக்கேனும் தெரிந்து கொண்டு தான் களத்தில் இறங்க வேண்டும். உதாரணமாக வீதியில் வாகனம் செலுத்தத் தொடங்கும் போது விபத்து பற்றிய முன்னெச்சரிக்கை இன்றி இறங்கினால் விளைவு விபரீதமாகலாம்.

எதற்காக இந்த முன்னோட்டம் என்று நீங்கள் தலையினைப் பிய்த்துக் கொண்டிருப்பீர்கள். எல்லாம் காரணத்துக்காகத்தான் என்பதைக் கட்டுரை முடிவில் காண்பீர்கள்.வீட்டுக்கொரு தொலைக்காட்சிப் பெட்டி என்ற நிலை மருவி வீட்டுக்கொரு கணினி என்ற நிலையிருக்க வீட்டில் உங்கள் பிள்ளைகள் கணினி பயன்படுத்துகின்றார்கள் எனில் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருப்பது அவசியம். அவர்கள் என்ன காரியங்கள் கணினியில் செய்கின்றார்கள். என்ன வகையான கணினி விளையாட்டுக்களை கணினியில் தேர்வு செய்கின்றார்கள். இன்ரநெற்றில் எப்படியான இணையத்தளங்களைப் பார்வையிடுகின்றார்கள். என்ற விடயங்களை அவதானிக்க வேண்டும்.

உங்கள் பிள்ளைகள் கைத்தொலைபேசி வைத்திருக்கின்றார்களா? ஆம் எனில் அவர்களுடைய பாவனை எப்படி போகிறது. எவ்வாறான நபர்களுடன் அவர்கள் தொடர்புகளைப் பேணுகின்றார்கள். எவ்வகையான ஒளிப்படங்களை ஒலிப்பாடல்களினை உபயோகிக்கின்றனர். பரிமாறுகின்றனர். எவ்வகையான குறுஞ்செய்திகளைப் பரிமாறுகின்றனர். என்ற விடயங்களை ஓரளவுக்கேனும் தெரிந்து கொள்ள வேண்டும்.நமது அன்றாட நடவடிக்கைகளின் போது எமக்கு அருகில் நிற்பவர்கள், நாம் வேலை செய்யும் இடம், செல்லும் இடங்கள், பொது இடங்கள், பொது கழிப்பறைகள் போன்றவற்றில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். கடவுள் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார் இல்லையா? அப்படியாயின் நாம் கடவுளாக ( ? ) நினைக்கும் இந்தத் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், இங்கும் ஒளிந்திருக்கலாம் இல்லையா?

பக்கத்தில் நிற்கும் போது வீடீயோ வசதியுள்ள கைத்தொலைபேசியின் உதவியுடன் எந்த நிலையிலும் எந்தக் கோணத்திலும் நீங்கள் படம் பிடிக்கப்படலாம். பின்னர் அவை இணையத்தளங்களில் பலரின் கண்களுக்கு விருந்தாகலாம். குறிப்பாகப் பெண்கள் இது விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். அதே போல் அந்தரங்கமான விடயங்களை மிகவும் நெருங்கியவர்களிடமின்றி வேறு எவரிடமும் ஒப்புவிக்கக் கூடாது. ஒருவருக்கும் சொல்லக்கூடாது. பரிமாறக்கூடாது என்று வாக்குறுதி வாங்கப்பட்டு சொல்லப்பட்டவைகளும் பரிமாறப்பட்டவைகளும் தான் இன்று இணையத்தளங்களில் பரிமாறப்பட்டுக்கிடக்கின்றன. மற்றவர்களிடம் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றின் காரணமாக பலரின் உயிர்கள் கூட காவு கொள்ளப்பட்டிருக்கின்றன.

இன்றைய உலகில் எதுவுமே இரகசியமில்லை. என்ற நிலையினைத் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் ஏற்படுத்தி விட்டன என்றால் அது மிகையாகாது. எனவே எமது பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டியது நமது கடமையாகும். ஒரு அரசியல் பிரமுகர் குறித்த இடத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் ஒரு பாதுகாப்பு அதிகாரி எவ்வாறு இடத்தினது பாதுகாப்பினை உறுதிப்படுத்துகின்றாரோ அதனையொத்த ஏற்பாட்டினை ஒவ்வொரு தனிநபரும் செய்ய வேண்டிய நிலை தற்போது எழுந்திருக்கின்றது.

இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படாவிட்டாலும் நாம் ஒழுங்கையில் சலம் கழிப்பதைக் கூட படம் பிடித்து செய்மதி ஊடாக இணையத்தளங்களில் காட்டிவிடக்கூடிய வசதியை மிகப்பெரிய இணைய நிறுவனமான கூகிள் செய்து விட்டது. இது இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டால் ஒழுங்கையில் குப்பை கொட்டியவர்கள் யார் என்பதை பொலீஸார் இன்ரநெற்றில் கண்டுபிடித்து விடுவார்கள். இது நடைமுறைக்கு வரத்தான் போகிறது. இச்செய்தியை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

இணையத்தளங்களிலும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் தமது சொந்த விபரங்களைப் பகிர்ந்து கொள்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் இதில் மிக மிக மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். நீங்கள் எந்தக் கணத்திலும் ஏமாற்றப்படலாம்.

இதற்கு சான்றுகள் ஒன்று இரண்டல்ல பல்லாயிரக்கணக்கில் உள்ளன.சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் பல குற்றங்களுக்கு வழிவகுத்து விடுகின்றன. சம்பவம் சம்பவித்த பின்பு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்களும் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தியவர்களும் இணைந்தே பொறுப்புக் கூற வேண்டும். பகுத்தறிவுடன் நாம் செல்லும் இடங்களிலும் வாழும் இடங்களிலும் செயற்பட வேண்டும். எல்லாம் முடிந்த பின் அழுவதில் ஆகப்போவது ஒன்றுமில்லை. தகவல் தொழில்நுட்பம் நன்மை செய்வதற்கு எப்படி மிகக்குறுகியளவு நேரத்தை எடுத்துக் கொள்கின்றதோ, அதேபோல தீமை செய்வதற்கும் எடுத்துக்கொள்கின்றது என்பதை உணர வேண்டும்.


மின்னஞ்சல் பாவனையின் போது மிகவும் கவனமாயிருக்க வேண்டும். பலருக்கு புதிதாக ஒரு மின்னஞ்சல் வந்தால் போதும் எல்லையில்லாத மகிழ்ச்சி. அது யாரிடமிருந்து வந்தது? உள்ளடக்கம் என்ன? நோக்கம் என்ன? என்றெல்லாம் சிந்திக்க மாட்டார்கள். ஏதோ இந்த உலகில் எல்லாரையும் விடுத்து தன் மீது மட்டும் அக்கறை கொண்டு எழுதப்பட்ட மின்னஞ்சலாகக் கருதி பதிலனுப்பத் துடிக்கிறார்கள். நாங்கள் ஏதும் இடையில் சொல்லப்போனால் ஏதோ பராக் ஒபாமாவுக்கும் தங்களுக்கும் இடையிலான தொடர்பைத் தடுப்பதாகக் கோபம் கொள்வார்கள்.

இப்படியானவர்களுக்கென்றே அமெரிக்கன் விசாக்களும் இங்கிலாந்து விசாக்களும் ஏன் வாங்கப்படாத அதிஷ்டலாபசீட்டுகளுக்கான பரிசுகளும் மின்னஞ்சல்களும் தேடிவருவது இன்னொரு இரகசியம் எத்தனை தடவை சொன்னாலும் நம் பேச்சை நம்ப மறுக்கிறார்கள். இவருக்கு நான் அமெரிக்கா போறது விருப்பமில்லை. அல்லது பொறாமை என்றோ நான் கோடீஸ்வரனாகி விடுவது இவருக்கு எரிச்சல் என்று இவர்கள் உள்ளுக்குள் புழுங்குவதை நாம் அறிவோம்.

அன்று நண்பர் ஒருவருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. விமான விபத்து ஒன்றில் குடும்பத்துடன் காலியான கோடீஸ்வரர் ஒருவரின் வங்கிக்கணக்கில் இருந்து உங்களை வாரிசாக பாவனை செய்து பணத்தினை எடுக்கும் வசதி வாய்த்திருக்கிறது. அதை எடுக்க தாங்கள் உதவலாம். அதற்குக் கைமாறாக அரைவாசிப்பணத்தை தமக்குத் தருமாறும், இந்த செயற்பாடுகளுக்காக கொஞ்ச பணம் செலவாகும் எனவும் அதனைத் தற்போது அனுப்பி வைக்குமாறும் அந்த மின்னஞ்சல் கூறியது. நண்பன் விவரமானவனாயிருந்ததால் “நீங்கள் எனக்குச் சேரும் பணத்தில் அதைக் கழித்து விட்டு மிகுதியை அனுப்பி வையுங்கள்”. என எழுதிய கடிதத்தக்கு இதுவரை பதில் இல்லையாம்.

இவ்வாறே தடுமாற்றமுள்ள இளையவர்களைத் தேடியும் பல மின்னஞ்சல்கள் வரும். “நான் மிகுந்த மோகத்தில் உள்ளேன் ஆர்வமிருந்தால் அஞ்சலிடவும்” என்றிருக்கும். இவர் அனுப்பினால் கடைசியில் காசை இழக்கும் நிலை வரை கொண்டு சென்று விடுவார்கள். இதே போல இந்த மின்னஞ்சலை இன்னும் 10 பேருக்கு அனுப்பினால் உங்களுக்கு இவ்வளவு தொகை கிடைக்கும் என ஒருவகை மின்னஞ்சல் வரும். இவர்களும் தங்கள் நண்பர்களுக்கும் அனுப்பியவருக்கும் அதைத் திருப்பி அனுப்ப அனுப்பிய மின்னஞ்சல் திருடருக்கு 10 மின்னஞ்சல் முகவரிகளை வழங்கிய வள்ளலாக நமது ஆள் இருப்பார். இதுவெல்லாம் இணையத்தில் நடக்கிற கூத்து.

இப்படி நாளாந்தம் நம் கண் முன்னால் கூட நிறையச் சம்பவங்கள் நடந்தேறிய வண்ணம் உள்ளதைப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. கற்பு தொடங்கி காசு வரை காணாமல் போகின்ற பெரும் கைங்கரியங்களுக்கு நம்மில் பலர் நாமே காரணமாகி விடுகின்றோம். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். கல்வியாகிலும் காசாகிலும் கடின உழைப்பின்றி அடைய முடியாது. உழைப்பினூடாகக் கிடைப்பதே நிலைக்கும். இதைத்தான் பழைய முதுமொழி ஒன்று “நனையாமல் நண்டு பிடிக்க முடியாது” என கூறுகிறது.

ஒரு வருடத்தில் ஓ.எல் உடன் டிகிறி தருகிறோம். இரண்டு வருடத்தில் இங்கிலீசு இல்லாமல் இங்கிலாந்தில் டிகிறி என்று விளம்பரப்படுத்துவார்கள். இந்தப் பசப்பு வார்த்தைகளை நம்பி எமது எதிர்காலத்தினை ஒப்படைக்கலாமா? அதே போல கற்கைநெறி முடிவில் கட்டாயம் வேலை எனக் கூறியதற்காக காசைக் கட்டிவிட்டு பின்பு கல்வி நிலையத்தினைக் காணவில்லையென முறைப்படுவதில் என்ன நியாயம்? இவர்களைப் பார்த்துப் பரிதாபப்படலாமே தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. ஒரு கிழமையில் ஆங்கிலம் பேசலாம் ஓடிவாங்கோ என ஒரு விளம்பரம் போட்டால் ஓடிப்போக ஒரு கூட்டம் எம்மிடையெ இருக்குமென்றால் நாம் எப்படி முன்னேற முடியும்?

வீட்டில் இருந்தபடி இணையத்தினூடாக ஒன்றுமே செய்யாமல் ஒரு தொகை உழைக்கலாம்! இதை நான் சொல்லவில்லை சமீபத்தைய யாழ் உதயன் பத்திரிகை விளம்பரம் ஒன்று சொன்னது. இணையத்தில் இத்தனை நாள் குப்பை கொட்டிய நமக்குத் தெரியாத இரகசியத்தை இவர்கள் கண்டு பிடித்து சொல்லப்போகிறார்களாம்.இப்படி யோசித்தால் இலங்கையின் தனிநபர் வருமானம் இந்த ஆண்டே அதிகரித்து விடுமே. புpறதெற்கு மகிந்த சிந்தனை?. மத்தியவங்கியில் இருப்பவர்களுக்கு இது தெரியாமல் போய்விட்டதோ?.

இதேபோல் விளம்பரம்போட்ட ஒரு இந்திய குழுதான் தெகிவளையில் பலகோடிகளைச் சுருட்டிக் கொண்டு கொழும்பிலிருந்த நமது ஆட்களுக்கு நாமம் போட்டது.இன்னும் அவர்களை பிடிக்க முடியவில்லை. இதில் பாதிக்கப்பட்டவர்களில் நமது நண்பரும் ஒருவர். அவர் மட்டுமல்ல அவரது நண்பரும் பணத்தை இழந்தார். என்னையும் கேட்ட பொழுது நான் மறுத்ததனால் தப்பித்துக்கொண்டேன். யாழ்ப்பாணத்தில் இல்லத்தரசிகள் பாவம் என்று நினைத்து அவர்களது மாதாந்த வருமானத்தினை கூட்டுவதற்காக ஒரு கூட்டம் சேவை செய்யப் புறப்பட்டிருக்கிறார்கள் போலும்.நாங்கள் தான் அவதானமாயிருக்கவேண்டும்

இப்போது சிலர் எங்கள் பிழைப்பில் ( ? ) அல்லது உழைப்பில்(?) மண்போட நினைக்கின்றனர். நாங்கள் சும்மா இருந்து உழைக்கிறது இவருக்குப் பொறாமை என்று புழுங்குவதும் எனக்கு உணர முடிகின்றது. பரவாயில்லை.நீங்கள் இனியும் தயார் எனில் நூறுபேர் சேர்ந்து சென்று “இணையத்தில் இருந்து கொண்டே செலவின்றி நுங்கு பருகலாம் வாருங்கள். வகுப்புக்குக் கட்டுங்கள் நான்காயிரம்” என கூறுபவர்களிடம் பணம் கொடுத்தால் மாதாந்தம் நாற்பதாயிரம் உழைக்கிறீர்களோ இல்லையோ தெரியாது, ஆனால் அவர்கள் ஒரே நாளில் நான்கு லட்சம் உழைப்பது உறுதி!



Sharing 3G Dongle Internet Connection

Posted by Thava சனி, 25 டிசம்பர், 2010 0 comments

# If you want to Share your Connection via Wi-Fi then you should have Wi-fi enabled computers.Please On Wi-Fi

1) First Insert your Dongle into one computer

2)

Allowing Dongle Connection to Share

a)(If Windows 7 ) Go to by Clicking on Control panel-----> Network and Sharing Center-->Change Adapter Setting

a)(If Windows xp ) Go to by Clicking on Control panel-----> Network Connection-->View Connections

b)Select on Your Dongle Connection name and Right Click On itClick on "Sharing" Tap

d)Tick only in "Allow other network users to connect through this computer's Internet connection" and tick off others. Also select Home Network which you would like to use (LAN/Wireless)

e)Click Ok(It will ask to confirm .you click on yes)

3)Now Connect Internet using your Dongle

4)Download the "Connectify" Software from

http://download.cnet.com/Connectify/3000-18508_4-75024171.html?part=dl-10061477&subj=dl&tag=button

5)Install the software

6)Configer it by Clicking next

a)Give a Network Name which you want then Click next eg:thavanet

b)Give a good password then Click next eg: abcd8765

c)Select Your Shared Dongle Connection from List then Click next

d)Click Finish

Configer Conectify

Giving Hotspot Name

Selecting Shared Connection

7)A Small Window will Appear in Bottom Corner which will show the status and available other computers

Viewing Hotspot Information

8)In other Computer You Select your Network name from the list by clicking Wifi Icon eg: thavanet

9)Click on Connect.It will ask the password then give it which you already gave

10) Now You can Access the Internet

I will write it in tamil later