தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு
மேனி எனும் வீணை மீட்டுகின்ற வேளை
மடியினில் உனை சேர்த்து
தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு
லலல லலலால் லலலல்ல லலல லலல்ல
லல்லலலல் லல்லலல்ல லாலா லா லா
இதுவரை உனை நானும்...ஆ ஆ ஆ ஆ
இளையவன் எனை நீயும்... ஆ ஆ ஆ ஆ
காணாமல் கூடாமல் எங்கேயோ வாழ்ந்தோம்
முதல் முதல் முகம் பார்த்து முழுவதும் உடல் வேர்த்து
நீராட போராட இந்நாளில் சேர்ந்தோம்
கல்யாணம் கச்சேரி கண்ணார எந்நாளில் காணலாம்
பொன்னூஞ்சல் பூப்பந்தல் வைபோகம் தைமாதம் மாலையிடு
தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு
இரவுகள் என்னை வாட்டும் இடையினில் அனல் மூட்டும்
நீயின்றி நான் இங்கு பாய் போடும் மாது
பிரிவுகள் இனியேது பிறவியில் கிடையாது
நீதானே நான் வந்து பூச்சூடும் மாது
அன்றாடம் பூங்காற்று உன் பேரை என் காதில் ஓதுது
எப்போது நான் வேண்டும் அப்போது பூங்காற்றை தூது விடு
தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு
மேனி எனும் வீணை மீட்டுகிற வேளை
மடியினில் உனை சேர்த்து
தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு
0 comments