எனது வலைப்பதிவுக்கு வரும் விருந்தினர்களே எனது பதிவுகள் சம்பந்தமான உங்கள் கருத்துக்களையும் விட்டுச்செல்லுங்க...
இக்கட்டுரை இலண்டன் பழையமாணவர் சங்கத்தின் ஒன்றுக்காக 2006 இல் நான் அனுப்பி வைத்தது. மின்னஞ்சலில் சேமிக்கப்பட்டிருந்தது என்கண்ணில் இன்று பட்டது இங்கே பதிவு செய்கிறேன்.
எனது வாழ்கையில் என்றும் பெருமை கொள்வது யாழ்பாணம் இந்தக்கல்லூரியில் கல்வி கற்றேன் என்பதுதான். எந்த ஒரு மாணவனோ பழையமாணவனோ தான் யாழ் இந்துக்கல்லூரியில் கற்றிராமல் வேறிடத்தில் கற்றிருந்தால் வாழ்க்கையில் உயர்ந்திருப்பேன் என்று ஒருபோதும் மனம் வெதும்பியதில்லை மாறாக யாழ் இந்துவில் கற்கமுடியாமல் போய்விட்டதே என வெதும்புபவர்கள் ஏராளம். கல்வி என்பது வெறும் ஏட்டுக்கல்வியை...
அலங்கார வளைவுகளைத்தாண்டிய பின்னும்அரங்கிற்குள் நுழையத்தயங்கி நின்றது கவிதை!''உன்னைப்பற்றித்தான்பேசுகிறார்கள்!உள்ளே போ''உபசரித்தார் ஒருவர்!உள்ளேநிற்கவும் இடமில்லாநெருக்கடி!அலட்டிக் கொள்ளத் தெரியாதமேடைவரை நடந்துபோய்மீண்டும் திரும்பிஇருக்கை தேடிஏமாற்றமடைந்தது!சாகித்ய மண்டலசண்ட மாருதங்கள்..ஞானபீடவாணவேடிக்கைகள்..இசங்களைக் கரைத்துரசங்களாய் குடித்தவர்கள்..தமிழ்செத்துப் போய்விடக்கூடாதேஎன்றகருணையால்பேனாவைப் பிடித்திருக்கும்பிரும்மாக்கள்...ஒருவர் கூடகவிதையைஉட்காரச் சொல்லவில்லை!இடம் தேடும் கவிதையைஏறிட்டும் பார்க்கவில்லை!சுற்றிச் சுற்றிப்...
நான் நினைப்பதுபோலவே எனது செயல்கள் போலவே என்னைச்சார்ந்தவர்களும் நான் நேசிக்கின்றவர்களும் நினைக்கவேண்டும் செய்யவேண்டும் என விரும்புவது நியாயமில்லை என்பது எனக்கு தெரியும் ஆனால் சில நேரங்களில் இவற்றினை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.அதற்கு வடிகால் வலைப்பதிவு தான் போலும்.யாழ் பல்கலைக்கழகத்தில் ”கோயிங் டவுண்” மகிழ்வு கொண்டாட்ட நிகழ்வு சம்பந்தமான உரையாடல் என்னை கோபத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுவிட்டது நான் இப்படியான நிகழ்வுகளில் என்ன நடைபெற்றது என விலாவாரியாக விசாரிப்பதுண்டு அப்படி சென்று கொண்டிருந்த உரையாடல் ”இன்றும் மது அருந்தி...
இங்கே தினம் தினம் உறவுகள் செத்தவண்ணமிருக்க கடல்கடந்து வாழும் பலா் போராட்டங்கள் உதவிகள் செய்துகொண்டிருக்க நேரடி உறவுகளான நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? உதவி செய்ய முடியாது. போராட முடியாது கூத்து்களையாவது நிறுத்தலாமல்லவா? உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நாம் வழமையாக செய்வதெல்லாம் செய்கின்றோமல்லவா? புலம்பெயா்ந்து வாழும் எனது பள்ளி நண்பனின் இணையப்படங்களை பார்க்க முடிந்தது. அவன் ஒரு பத்திரிகையாளன் பல கட்டுரைகளை வரைந்திருக்கிறான் தமிழ்மக்கள் பற்றியெல்லாம் பிதற்றியிருக்கிறான்.ஆனால் அவனது கூத்ததுப்படங்களை பார்க்க ஆபாசமாகவல்லவா இருக்கிறது....
இணையத்தில் அலைந்தபோது என்மனதை தொட்ட கவிதை ஒன்றுhttp://mukunthan.wordpress.com/2008/04/25/met...
80களில் ஈழப்பிரச்சனை தீவிரமடைந்த போது, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்களின் செயல் பாட்டை மிகுந்த கோபத்தோடு விமர்சனம் செய்தேன். ”அமிதாப் பச்சனுக்கு அடிபட்டு விட்டதென்றால் அலறிக் கொண்டு ஓடுகின்றார். இலங்கையிலே பட்டப்பகலில் நட்ட நடுத்தெருவில், வெட்டொன்று துண்டிரண்டாய் விழுந்து கொட்டு கொட்டென்று கொட்டும் குருதியிலே தமிழ் கடந்து கோசங்கள் போடுவதும் வஞ்சமறியாத பிஞ்சுக் குழந்தைகளின் நெஞ்சினை பெய்த அம்பு நீண்டு கிழிப்பதையும் பார்த்த பின்பும் கேட்ட பின்பும் ஓர் அதட்டல் போடக்கூட உனக்கு அவகாசம் இல்லை யென்றால் சரியாடி பராசக்தி’...
இந்திய சின்னத்திரை தொலைக்காட்சித்தொடர்கள் பலவற்றை தடைசெய்தோமானால் நமது சமுதாயம் வளம்பெறும் என கருதுகிறேன்.ஒருவனுக்கு இரண்டு மனுசி என்று கதை வராத தொடர் ஏதாவது உண்டா? அதுக்கு கதையில பல நியாயப்படுத்தல்கள். அந்த தொடர்களுக்கு நம்ம சனம் குந்தியிருந்து எதிர்வு கூறிக்கொண்டிருக்க வேணுமா?. (தொடரு...
இன்றுள்ள இளைய சமுதாயம் மது,மாது,புகைத்தல் நடவடிக்கைகள் தான் வாழ்கையின் மகிழ்ச்சி என்றும் அதனை அனுபவிக்கத்தவறினால் தாம் மற்றவா்களினின்றும் அன்னியப்படுகின்றோம் என கற்பனைசெய்து தவறான கலாச்சாரத்திற்கு தம்மை இட்டுச்செல்கின்றனா்.இவற்றுக்கு தொலைக்காட்சிகள் பல்கலைக்கழகங்களின் மகிழ்ச்சி நிகழ்வுகள் மற்றும் நண்பர்களின் ஒன்றுகூடல்கள் தான் பெரும் துணை போகின்றன என நான் கருதுகிறேன். தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்து கொண்டே செய்யப்படும் தவறுகளை இல்லை தப்புக்கு அவர்கள் தான் விலை கொடுக்கவேண்டு...
நிச்சயமாக இவர்கள் ஆண்களினை விட வாழ்க்கையில் கூடிய துன்பங்களை தாங்குகிறார்கள்.பெண்கள் ஆண்களுக்கு சமமானவா்கள் என்றெல்லாம் பேச்சளவிலும் எழுத்தளவிலும் வைத்துக்கொள்ளலாம்.ஆண்களால் செய்யக்கூடியவை அனைத்தினையும் பெண்கள் செய்யமுடியும் அது திறமைக்கு சவாலாக இருக்கலாம் .ஆனால் பெண் ஒருவள் 100 வீதம் சகிப்புத்தன்மை கொண்டவளாக இருக்க முடியுமா? ஆணொருவனால் 100 வீதமான தாயாக இருக்கமுடியுமா?.எனது அனுபவத்தில் சாதாரண வாழ்க்கையில் பெண்ணொருவளுக்கு ஏற்படும் நெருக்கடிகளும் சங்கடங்களும் இயலாமை நிலைகளும் மிக அதிகம்.ஆண்களினால் பலவற்றை சகித்துக்கொள்ள முடியும்...
எமது வட்டத்துள் இருந்து எம்மைப்பற்றி உலகம் என்ன சொல்கிறது என்று சிந்தித்தோமானால் அது சிலவேளைகளில் சூனியமாகக்கூட இருக்கலாம்.எமது நடவடிக்கைகள் மற்றவர்களை சாதகமாகவோ பாதகமாகவோ பாதித்திருக்கின்றது என்பது பல சந்தர்ப்பங்களில் நமக்கு தெரிந்திருப்பதில்லை. இவை பற்றி எமது காதுகளுக்கு எட்டும்போது அது அதிர்ச்சியாகவும் சிலவேளைகளில் ஆச்சரியமாகவும் சிலவேளைகளில் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.எது எப்படியோ நமது வழி நேரானதாகவும் நியாயமானதாகவும் உறுதியானதாகவும் இருக்குமிடத்து எம்மைப்பற்றிய அபிப்பிராயங்களும் எமது செயற்பாடுகளின் பிரதிபலன்களும் நிச்சயம்...
ஆண்கள் எதையும் தாங்கும் வல்லமை கொண்டவர்கள் என்றகருத்து பொதுவில் உண்டு இந்தவிடயத்தில் பெண்களும் சளைத்தவர்கள் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு அதை நான் மறுக்கவில்லை ஆயினும் 100 ஆண்களையும் 100 பெண்களையும் எடுத்தால் இயலாமையில் அழுகின்றவர்கள் கூடுதலாக நிச்சயம் பெண்களாகத்தான் இருப்பார்கள்.உதாரணத்ததுக்கு எமது குடும்பத்தில் தற்போதைய நிலையில் எந்த ஒரு சந்தா்ப்பத்திலும் நான் அழுவதில்லை(18 வயது வரை நான் அழுத ஞாபகம்! தற்போது உள்ளத்தில் அழும் சந்தர்ப்பங்கள் உண்டு) ஆனால் என்னுடைய அம்மா தங்கைகள் இயலாமையின்போது கண்ணீர் விட்டதை பார்த்திருக்கி...
நான் எனது நிறுவன நடவடிக்கைகளின்போது பலதடவை எதிர்பாராத தோல்விகளை சந்தித்திருக்கின்றேன்.ஆயினும் அதற்காக மனமுடையவில்லை எங்கோ எனக்கான பக்கங்கள் இருக்கின்றதாகவே நம்புகிறேன் அந்தப்பக்கங்களை தேடித்தேடி கையெழுத்திட்டவண்ணம் இருக்கின்றேன் என்னுடைய வாழ்வின் இறுதிவரை என்னுடைய கையெழுத்து வேட்டை தொடரு...
சிலவருடங்களுக்கு முன்வரை எனக்கு முன்கோபம் அதிகம்!.தற்போது ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வருகிறேன்.இயன்றவரை வெற்றி கண்டிருக்கின்றேன்.இந்தப்பணியில் எனக்கு உதவுவது கூடுதலாக என் அம்மாதான். எல்லா விடயங்களையும் அவரிடம் மனம் திறந்து பேசுவேன் எனது தங்கைமார்கூட இப்படி அம்மாவிடம் மனவிட்டு பேசமாட்டார்கள். கோபத்தினை குறைப்பதற்கும் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும் நல்ல மருந்து மனதில் உள்ளதை கொட்டிவிடுவதுதான். அம்மா ஒன்றை மிகத்தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார் தன்னுடைய கருத்தை எனக்கு எப்படியாகிலும் புரியவைக்கமுடியும் என்று.எது எப்படியோ ஒருசில...
ஒரு சிறிய விடயத்தினை பெரிதாக்குவதன்காரணமாகவே பிரச்சனைகள் தோன்றுகின்றன.ஆறுதலாக இருந்து சிந்தித்தால் எமக்கு அது வெட்கமானதாக இருக்கும்.ஐயோ இதற்கா இவ்வளவு ஆரவாரப்பட்டோம் என்று எண்ணுவோம். அனைத்தையும் இலகுவானதாக எடுத்தோமானால் பிரச்சனை என்பதே இல்லாமல் இருக்கும். எந்த ஒன்றுக்கும் தீர்வு இல்லாமல் இல்லை.அந்த வேளையில் அவா் அப்படி நினைத்திருப்பாரோ அல்லது இப்படி நினைத்திருப்பாரோ என பலவாறாக நினைத்து நாம் குழம்பிக்கொண்டிருப்போம் ஆனால் அவா் ஒன்றும் நினைத்திருக்கவே மாட்டார். எவா் எப்படி நினைத்தால் என்ன நமக்கு இது பிழை என்று உணரமுடிந்தால் அதனை...