வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

March 10,2017
நேர்முகத்தேர்வில் தகுதி பார்ப்பதில் தவறில்லை.
பரீட்சை முடிவுகள் எப்போதும் சரியான திறன் பெறுபேறுகளை கொடுப்பதில்லைதான் இதற்கு மாற்றீடான பொறிமுறைகள் அவசியம்

கா.பொ. த உயர்தரத்தில் வரும் புள்ளிகளை மட்டும் வைத்து பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கும் வேளைகளிலும் பல மாணவர்கள் கூறுகின்றனர். உண்மையில் வெளிய தவறிநிற்கும் மாணவர்களில் பலர் உள்செல்லும் மாணவர்களை விட திறமையானவர்களாயிருந்தும் பரீட்சைகளில் கோட்டை விடும் சந்த்ப்பங்கள் நிறைய உண்டு தானே. 

எல்லா இடமும் பிரச்சனைதான். இந்த கல்விக்கொள்கைகள் பரீட்சைகள் அனைத்தும் மீளாய்வு செய்யப்படவேண்டும். பின்லாந்து முறை இங்கு கொண்டு வந்தால் மிக மிக நல்லது


March 9 2017
கோழி வளர்ப்பு, விவசாயம் ,கால்நடை வளர்ப்பு ,மீன்பிடி இவை எல்லாம் பட்டதாரிகள் செய்யக்கூடாத வேலைகளாம், சுயதொழில் செய்பவன் எல்லாம் இழுக்கானவனாம் நாடகம் போடுகினம் பல பட்டதாரிகள் இப்படி நிறைய வேலைகள் செய்து முன்னேறியுள்ளனர். உயர்தரத்துடன் எந்தவித மூலதனமும் இன்றி என்னால் ஒரு தொழில்முயற்சியாளனாய் வரமுடிந்தது.இப்படி நிறையப்பேர் உள்ளனர்.என்னிடம் பல பட்டதாரிகள் வேலைகேட்டு வந்தனர் ஆனால் அவர்கள் அந்த வேலைக்குரிய தகுதியை சிறிதேனும் கொண்டிருக்கவில்லை. அறிவுரை கூறி அனுப்பினேன்.ஆனால் உயர்தரத்துடன் வந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
பட்டம் வேலைக்கான அளவுகோல் அல்ல என்று அறியாத படித்த முட்டாள்களை நினைத்து அருவருப்பாக உள்ளது.இவர்கள் மக்கள் சேவை செய்ய பொருத்தமானவர்கள் என்று எவ்வாறு கருதமுடியும்.உண்மையில் உயர்தரத்துடன் பரீட்சைகள் ஊடாக அரச பணி செய்பவர்களின் தரத்தை விட நியமனத்தின் ஊடாக வந்தவர்கள் திறன் குறைவே.விதிவிலக்குகள் உண்டு. பட்டதாரிகள் எல்லோரும் திறனற்றவர்கள் அல்லர். அவர்களிலும் நிறைய பேர் திறமையானவர்கள் அவர்களில் பலர் போராடவில்லை ஒரு வேலை செய்து கொண்டு நல்லதொரு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர்.
எக்காரணம் கொண்டும் நேர்முகத்தேர்வோ அல்லது பரீட்சைகள் வைக்காமலோ நியமனங்கள் வழங்கக்கூடாது. நேர்முகத்தேர்வில் குறிப்பாக மக்கள் பணி செய்வதற்கான நேர்மை சேவை மனப்பாங்கு உள்ளதா என்பதும் தொடர்பாடல் முறைகளும் பரிசோதிக்கப்படவேண்டும். இப்ப இங்க கருத்துபதிய சில பட்டதாரிகள் வருவினம் அவர்களின் மொழிநடை விளக்கங்களில் இருந்து அவர்களின் அறிவை மக்கள் சேவைக்கான பொருத்தப்பாட்டை மதிப்பிட்டுக்கொள்ளுங்கள் நண்பர்களே.

வேலை அனைவருக்கும் தேவை ஆனால் போராடும் போது முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அவர்களின் மனதில் உள்ள எண்ணங்கள் அவர்களின் நேர்மையினை கேள்விக்குள்ளாக்குகின்றது. அது தான் வருத்தம் இந்த எண்ணங்கள் உயர்சாதி தாழ்ந்த சாதி மனநிலைகள் போலவும் ஆண்டான் அடிமை கருத்தியல்போலவும் காணப்படுகின்றது இவர்கள் எப்படி சாதாரண பொதுமக்களுக்கு நல்லெண்ணத்துடன் நேர்மையாக பணிபுரிவார்கள்? அரச அலுவலகங்களில் கல்வித்தரம் குறைந்த சாதாரணமக்களால் எதிர்கொள்ளப்படும் அவலங்களை நேரடியாக கண்டவன் நான். அவை எமக்கு நிகழும்பொது எம்மால் வாதாடி பெற முடிகிறது ஆனால் அவர்களால் முடிந்திருப்பதில்லை பாவம் இந்த மக்கள். தங்கள் வரிப்பணத்தை கொடுத்துவிட்டு சேவைகளுக்காக அலைகிறார்கள்.
தற்போது இந்த பட்டதாரிகள் போராட்டத்திற்கு எதிர்ப்பதன் காரணம் அவர்களின் கோரிக்கையின் தன்மைதான் மற்றப்படி எதிர்ப்பில்லை. எங்கள் வரிப்பணத்தில் அரசபணிசெய்யவரும் அலுவலர் அதற்குரிய தகுதியுடன் வரவேண்டும் என ஒரு குடிமகன் நினைப்பதில் தவறில்லைதானே

பில்கேட்ஸ் ஆரம்பத்தில் ஒரு பட்டதாரி இல்லை மார்க்கூட பட்டதாரி இலலை. அதே நேரம் நிறைய பட்டதாரிகள் தொழில்முயற்சியாளர்களாக உள்ளனர் அவர்களை மதிக்கின்றேன்.பொட்டிப்பரீட்சைகள் நேர்முகத்தேர்வுகளை எதிர்கொண்டு வேலைகளை பெற்றவர்களை மதிக்கின்றேன்

படிச்சா வேலை தரவேணும் என்பது பிழையான வாதம் . கல்வி கரையில வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டிருக்கலாம் திறமைக்குத்தான் வேலை தவிர சான்றிதழுக்கு அல்ல. சான்றிதழ் வைத்திருப்பவர்களில் 50 வீதமானவரிடம் அதற்குரிய தகுதி இல்லை. நேரடியாக ஒப்புகொள்கின்றனர்.
இரக்கப்பட்டு கொடுக்கிற விடயம் அல்ல வேலை (அதுக்கு பெயர் வேற). வேலையும் வேணும் அத அரசவேலையாகவும் வேணும் என்று கேட்பதுதான் தவறு. விரும்பினீங்க போட்டி போட்டு வாங்க. வெற்றிடம் இருக்கு ஆட்களை போட்டிப்பரீட்சை வைச்சு எடுங்க நேர்முகத்தேர்வு வைச்சு எடுங்க என்று போராடுங்க அதவிட்டுட்டு நேரடியா துாக்கி தா என்பது சப்பை வாதம்

March 2 2017
கேப்பாப்பிலவு மக்கள் தங்களுக்கு அரசு வேலை தரவேண்டும் என்று கேட்கவில்லை தங்கள் காணியை விட்டால் விவசாயம் செய்து பிழைக்கின்றோம் என்று கேட்டார்கள் விடாது போராடினார்கள் ஆனால் இங்க #பட்டதாரிகள் நாள் எண்ணிபோராடுறது எதற்காக? பரீட்சை வைக்காம பரிசோதிக்காம அரசவேலை தா என்கிறார்கள். கனவுகாணலாம் ஆனால் கேப்பாப்பிலவுடன் ஒப்பிட்டு கனவு காண்பது தவறு.

March 2 2017
றோட்டில இருந்து அரசியல்வாதிகளுக்கு சமைச்சுக்குக்கொண்டு இருக்கிற ஆட்கள் ஒரு நல்ல சாப்பாட்டுக்கடை போட்டா 50 பேருக்கு வேலை கிடைச்சமாதிரி இருக்கும்.உண்மையில் இன்று வேலையும் அரசாங்கமே தரவேண்டும் என்று #பட்டதாரிகள் போராட துாண்டியது இந்த அரசியல்வாதிகள்தான்

ஆரம்பத்தில் இருந்து மக்கள் பணத்தில் இலவசக்கல்வி வழங்கப்படுவதே உங்கள் சொந்தக்ககாலில் நின்று உங்கள் எதிர்காலத்தை வளப்படுத்தி நாட்டுக்கு ஏதாவது செய்யுங்க என்றுதான் இ்ப்பிடி அவர்களின் வாக்கு வங்கிக்காக துாண்டிவிடும் அரசியல்வாதிகளுக்கு சோறு அவிச்சு போடவல்ல.

எந்தவித பெரிய முதலீடும் இன்றி ஆரம்பிக்கப்பட்ட சிறிய முயற்சிகள் தான் இன்று பெரு விருட்சங்களாக உயர்ந்துள்ளன.

இருந்தாலும் அரசு நிறைய சுயதொழில் முயற்சிக்கடன்களை வழங்கிவருகின்றது அத்துடன் புதுத்தொழில் முயற்சிகளுக்கு நிறைய வசதிகளை செய்து கொடுக்கிறது. அரசாங்
க வேலை தான் வேணும் என்றுகேட்பதில் தப்பில்லை ஆனால் எந்தவித பரீட்சைகளும் இன்றி சான்றிதழுக்கு வேலை தருமாறு கேட்பது மிக மிக அபத்தமானது..

வேலை கொடுக்க நிறைய தனியார் துறையினர் தயார் ஆனால் குறித்த வேலைகளை செய்யக்கூடிய தகுதியுடன் அவர்கள் உள்ளனரா என்பது கேள்வி? வெறும் பட்டச்சான்றிதழை மட்டும் ஆதாரமாக வைத்த வேலை எந்த நிறுவனமும் கொடுக்காது.


 ஆசிரியர் போட்டிப்பரீட்சைக்கு தோற்றுங்கள் வெற்றி பெறுங்கள் வேலையினை பெறுங்கள் சாதாரண பொது அறிவு இல்லாத பட்டதாரி ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்கமுடியாது. அரச வேலை இல்லை எ்னறால் நல்ல தனியார் கல்வி நிலையத்தை நிறுவி உங்கள் வேலையினை உறுதிப்படுத்துங்கள் நன்றாக படிப்பித்தால் எந்த மூலைக்க என்றாலும் தேடி போய் பணம் கொடுத்து கற்க மாணவர்கள் தயார்

குழறுபடி இருந்தால் அதற்கெதிராக போராடலாம் ஆனால் பரீட்சையின்றி வேலை தா என்று கேட்பது அநியாயம். மற்றது தேசியகல்வியல் கல்லுாரி ஆசிரியர் கல்விக்கான் நிறுவனம் அதில் நியமனம் வழங்குவது ஆசிரியர் பயிற்சி முடிந்தவர்களுக்கான நியமனம் . பல்கலைக்கழகப்பட்டம் ஆசிரியர் தரத்திற்குரிய கல்வியல்ல அதற்கு மேலதிகமா B.Edu செய்திருந்தால் வழங்கலாம்

பலர் இலக்கின்றி பட்டப்படிப்பில் ஈடுபடுவதும் பட்டம் கிடைத்தால் நியமனம் கிடைக்கும் என்று நினைத்து படிப்பதும் தான் பிரச்சனை

இங்கு ஆதரவு தரும் அரசியல்வாதிகள் கட்சி அலுவலகத்திற்கும் தங்கள் அலுவலகங்களுக்கும் வேலையில்லா பட்டதாரிகளை அழைக்கும் நோக்கில் செயற்படுகின்றனர். அவர்களுக்கு தங்கள் வாக்கு வங்கி பிரச்சனை

நான்போட்ட பதிவுகளுக்காக ஒரு பல்கலைக்கழக பட்டதாரி தம்பி உள்பெட்டியில வந்து துாசனத்தில பேசுது இப்பதான் விளங்குது பட்டம் எதற்கு வழங்கப்பட்டிருக்கு என்று அவர்களுக்கு எங்கள் வரிப்பணத்தில் வேலை வழங்கினால் அரச சேவை எப்படி இருக்கும். அரச சேவை பெறும் மக்கள் எப்படி பேச்சு வாங்குவார்கள் என்று எண்ணி வியக்கின்றேன். தேவைஏற்படின் முழுவிபரங்களுடன் முறைப்பாடு பதிவு செய்யப்படும். பொதுவெளியிலும் பகிரப்படும். எனக்கும் துாசணம் தெரியும் ஆனால் என்னைத்தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. முதலில் மற்றவர்களுடன் நாகரீகமாக பேசப்பழகுங்கள் பிறகு வேலை கேட்பம்

February 28 2017
வேலையற்ற #பட்டதாரிகள் போராடிய செய்தி தேடினால் சிம்பாவே, நபீபியா ,இலங்கையில் மட்டுமே அறியக்கிடக்கிறது. பட்டம் தந்தா வேலையும் கொடுக்கோணும் என்பது அரசியல்வாதிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வாக்கு வங்கி சந்தைப்படுத்தல் முறைமை. அரசு இந்த முறையினை ஒழிக்கவேண்டும் எல்லாவற்றுக்கும் போட்டிப்பரீட்சை வைப்பதே நல்லது. திறமையிருந்தால் வேலை நிச்சயம் கிடைக்கும். நிறைய இடத்தில் வேலை இருக்கு அதற்கு திறைமையானவர்கள் இல்லை.

முழுமையான பதிவுகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்