வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

Posted by Thava செவ்வாய், 18 நவம்பர், 2008 2 comments

எனது வலைப்பதிவுக்கு வரும் விருந்தினர்களே எனது பதிவுகள் சம்பந்தமான உங்கள் கருத்துக்களையும் விட்டுச்செல்லுங்கள்!

பசுமை நினைவுகள்:அது ஒரு கனாக்காலம்…..

Posted by Thava திங்கள், 17 நவம்பர், 2008 0 comments

இக்கட்டுரை இலண்டன் பழையமாணவர் சங்கத்தின் ஒன்றுக்காக 2006 இல் நான் அனுப்பி வைத்தது. மின்னஞ்சலில் சேமிக்கப்பட்டிருந்தது என்கண்ணில் இன்று பட்டது இங்கே பதிவு செய்கிறேன்.
எனது வாழ்கையில் என்றும் பெருமை கொள்வது யாழ்பாணம் இந்தக்கல்லூரியில் கல்வி கற்றேன் என்பதுதான். எந்த ஒரு மாணவனோ பழையமாணவனோ தான் யாழ் இந்துக்கல்லூரியில் கற்றிராமல் வேறிடத்தில் கற்றிருந்தால் வாழ்க்கையில் உயர்ந்திருப்பேன் என்று ஒருபோதும் மனம் வெதும்பியதில்லை மாறாக யாழ் இந்துவில் கற்கமுடியாமல் போய்விட்டதே என வெதும்புபவர்கள் ஏராளம். கல்வி என்பது வெறும் ஏட்டுக்கல்வியை மாத்திரம் குறிப்பதல்ல என்பது யாவருமறிந்தது. இலங்கை போன்ற நாடுகளின் பரீட்சையினை மட்டுமே மையமாகக்கொண்ட கல்வித்திட்டம் இதனை உணர்த்துவதற்கு தடங்கலாகத்தான் இருக்கின்றது. எனினும் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகளும் சூழலும் இந்த இடைவெளியினை நிரப்ப பெரிதும் பங்காற்றுகின்றன. தனியார் கல்வி நிலையங்கள் வெறுமனே பரீட்சையினை நோக்கமாகக்கொண்டவை. இவை மாணவர்களின் சிந்தனைத்திறனை புடம்போடுவதற்கு மறுக்கின்றன. மாறாக அதனை மழுங்கடிக்கின்றன. ஆனால் கல்லூரிகளும் பாடசாலைகளும் பல்கலைக்கழங்களும் அவ்வாறல்ல அவை பரீட்சைக்கான கல்வியை விடவும் வாழ்க்கைக்கான கல்வியை வழங்குவதில் கூடிய கவனம் செலுத்துகின்றன. வாழ்கைக்கான கல்வி சரியாக வழங்குமிடத்து பாட்சைக்கான கல்வியில் மாணவர்களின் சிந்தனைத்திறன் விருத்தியடைகின்றது என்பது என் கருத்து. இந்த வகையில் மாணவனை நாட்டுக்கு நல்லதொரு பிரசையாக வளத்தெடுப்பதில் எமது கல்லூரிக்கு நிகர் எமது கல்லூரிதான். எமது கல்லுரியின் பழைய மாணவர்கள் பல்துறை வல்லுனர்களாக உலகளாவிய ரீதியில் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் சளைத்தவர்கள் அல்லர். ஆளுமையுடையவர்கள் முற்போக்கு சிந்தனையுடையவர்கள். கல்லூரி வாழ்கையில் ஒவ்வொரு விதமாக இருந்தவர்கள் இன்று ஏதோ ஒருதுறை வல்லுனர்களாக இருக்கின்றார்கள். இதற்கெல்லாம் காரணகர்த்தா யார்? யாழ் இந்து அன்னை என்கின்ற ஒரு “வேர்ச்சுவல் மதர்” என்றுதான் கூறவேண்டும் அதற்கு வரைவிலக்கணம் கொடுக்கமுடியாது அவள் ஒருவகையில் தாய் ஒருவகையில் சமூகம் என ஒவ்வொருவகையில் ஒவ்வொரு வடிவமாக நின்று எம்மை வழிநடத்தினாள். வகுப்பறையில் கற்றவைகள் பாடப்புத்தகங்களாக இருக்கலாம்.ஆனால் கல்லுரி மண்ணில் கற்றவைகள் ஏராளம் ஏராளம். இப்படித்தான் இதைச்செய்யவேண்டும் என்று கரும்பலகையில் எழுதிக்காட்டப்படவில்லை மாறாக செய்து காட்டப்பட்டது.அதனை காட்டியவர்கள் பலர். இவர்களில் அதிபர்கள் ஆசிரியர்கள் சக மாணவர்கள் பழையமாணவர்கள் நலன்விரும்பிகள் என எமது கல்லுரிச்சமூகமே எடுத்துக்காட்டுக்காட்டுகளாக திகழ்ந்ததன் விளைவு இன்று இந்த இதழில் என் வரிகள்…. இவை பேனா மை சிந்திய எழுத்துக்களல்ல நவீன கணினி ஒன்றில் எனது விரல்களின் அழுத்தல்களில் இருந்து வெளிவந்தவை.

1990 ம் ஆண்டு சனவரி 9 ம் திகதி யாழ் இந்துக்கல்லுரியில் நான் புதியமாணவனாக அப்பாவுடன் உள்நுழைந்த போது எழுந்த உணர்வுகளை எந்தப்பேனாகொண்டோ எந்தக்கணினி கொண்டோ எழுத்துருவாக்கம் செய்யமுடியாது. இது திரு பொன்னம்பலம் அதிபராக இருந்த காலப்பகுதி திரு மகேந்திரன் உப அதிபராக இருந்தார். கல்லுரியின் விடுதியில் சேர்த்து விடடார்கள் நானோ சின்னப்பயைன் உருவத்திலும் கூட. கல்லுாரி விடுதியின் நுழைவாயில் எனக்கு உண்மையிலேயே பென்னம்பெரியதாக தோன்றியது. ஏன் அரசகாலச்சிறை போலவும் தோன்றியது. எனது கண்ணில் கண்ணீர் குழமாகி தெரிந்த பயத்தை உபஅதிபர் தேற்றி நான் பார்த்துக்கொள்கிறேன் என அப்பாவிடம் கூறியது நெஞ்சைவிட்டகலவில்லை. எனது விடுதிவாழ்க்கை கற்றுத்தந்தவைகள் நிறைய இருக்கின்றன. அங்கு எனக்கு வழங்கப்பட்ட “சிறுசு” என்ற பட்டப்பெயரை மறக்கவில்லை. நான் எந்த ஒருசின்னப்பிரச்சனைக்கும் அழுதுவிடுவேன் இது எனது ஆரம்ப கல்லூரிவாழ்கை ஆனால் இன்று துன்பம் வரும்போதும் சிரிக்கின்றேன் இது கல்லூரி எனக்கு கற்று;த்தந்தது. என்னுடன் பழகியவர்கள் பலர். இருப்பவர்கள் சிலர். என் கல்லுாரி வாழ்க்கையில் பழகிய மூத்த ,சக மாணவர்கள் சிலர் உயிருடன் கூட இல்லை தம்மையே அவர்கள் தியாகம் செய்துவிட்டார்கள். கற்பித்த ஆசிரியர்களில்,மாணவர்களில் சிலர் எனது அழுகைக்கு காரணமாயிருந்தார்கள் அவர்களின் மீது எனக்கு அன்று வெறுப்பாயிருந்தது. அப்போது நினைத்தேன் வளர்ந்து பெரியவனாகியதும் அவர்களை ஒருவழிபார்க்க வேண்டும் என்று. ஆனால் இன்று பெரியவனாகிவிட்டேன். இவர்களைக் காண்கிறேன். வெறுப்புவரவில்லை.இனம்புரியாத அன்பு ,பணிவு பெருகுகிறது இதற்கு காரணம் எனது கல்லூரி வாழ்க்கை தான்.

விளையாட்டுத்திடலுக்கு சென்றால் என்ன ஆய்வுகூடத்துக்கு சென்றால் என்ன நூலகத்துக்கு சென்றால் என்ன கல்லூரி மண்ணில் எமது வகுப்பு மாணவர்கள் ஒழுங்கு வரிசையில் செல்லும் ஒவ்வொரு கணத்திலும் நான் முதல் மாணவனாக சென்ற கணத்தை நினைத்துப்பார்க்கின்றேன் ஆம் இந்த சம்பவத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது .எனது பழைய நண்பர்களுடன் கதைக்கும்போது நினைவு கூருவேன். வயிறு குலுங்க சிரிப்பார்கள். ஆண்டு 11 படித்துக்கொண்டிருந்த காலம் எமக்கு சமூகக்கல்வியும் வரலாறும் கற்பித்தவர் திரு ஜெயபாலன் அவர்கள்.(இப்பொழுதும் கற்பிக்கிறார்)அவர் உருவத்தில் சிறியவர் அதனால் முதல்வரிசை மேசையில் நடுவில் இருந்த சேயோன் என்ற மாணவனின் மேசையில் ஏறி உட்கார்ந்து பாடம்சொல்லுவார். ஒருநாள் மேசையில் ஏறிஇருந்து கற்பித்துக்கொண்டிருக்கையில் மேசையில் பேனா மையினை சேயோன் சாதுர்ஜயமாக கொட்டிவிட அது ஆசிரியரின் காற்சட்டையினை பாழாக்கிவிட்டது. அதனை ஒழுக்கவிதி மீறாத நண்பன் ஜெயமதன் காட்டிக்கொடுத்தது விட சேயோன் வாங்கிஅடியை சேயோன் மறந்தானோ என்னவோ என்னால் மறக்கமுடியாது.

இது தவிர தவமணிதாசன் ஆசிரியரின் அடிகளுடன்கூடிய கற்பித்தல்கள், மனோரஞ்சன் ஆசானின் கராட்டி குத்துக்களுடன்கூடிய ஆங்கிலம், என்னை கணிதபாடத்தை விரும்ப வைத்த சிறீதரன் மற்றும் சபாநாயகம் ஆசான்களின் கண்டிப்புடன் கூடிய கணிதபாட வகுப்புக்கள், ச.வே.பஞ்சாட்சரம் ,சிவராஜா ஆசான்களின் தேசியப்பற்றுடனான தமிழ் வகுப்புக்கள், கஜன் ஆசிரியரின் அறிவியலுடன் கூடிய விஞ்ஞானம், புண்ணியலிங்கம் ,தர்மகுலசிங்கம் ஆசிரியர்களின் இந்துமதத்தை உணரவைத்த பிரார்த்தனை வழிபாடுகள்,சண் தயாளன் ஆசிரியரின் சகோதரத்துவமான விளையாட்டுப்பயிற்சிகள், செல்வி செல்லத்துரை மற்றும் பத்மநாதன் ஆகியோரின் இனிமையான சங்கீத வகுப்புக்கள், வகுப்பறையில் நுழையும்போதே ”31.12 ஆயிரத்து தொளாயிரத்து...” என வியாபார இலாபநட்டகணக்கினை ஆரம்பித்து விடும் சிவஞானசுந்தரம்பிள்ளை அவர்களின் வர்த்தகமும் கணக்கியலும் வகுப்புக்கள் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அதிபர் பஞ்சலிங்கம் அவர்களின் மாணவர்களின் ஆக்கத்திறன் விருத்தியின் மீது கவனம் செலுத்திய நிருவாகம் நினைவகலாதது, அதிபர் சிறீகுமரன் அவர்களின் கண்டிப்பான அணுகுமுறைகளும் எம்மை வியக்கவைத்தவைகளே. இதேபோல உயர்தரவகுப்பில் எனது லியோக்கழக சாதனைகளுக்கு முன்னோடியாக இருந்தவரும் வகுப்பாசிரியராக இருந்து பிரயோக கணிதம் கற்பித்த கொஸ்அல்பா என்றே மாணவரால் அறியப்பட்ட ஞானப்பிரகாசம் ஆசிரியரின் பயனள்ள அறிவுரைகள் பயனுள்ளவை. இரசாயனவியலில் சுருக்கமானதும் காட்டமானதுமான கற்பித்தலை செய்த குட்டி மக்கர் என்று செல்லமாக அழைக்கும் மகேஸ்வரன் அவர்களின் கற்பித்தல் .என்னை லியோக்க கழகம் சார்பாக அழைக்க கழகத்தில் இருந்து யாரேனும் வந்தால் அவர்கள் கேட்காமலேயே என்னை நக்கலுடன் அனுப்பிவைப்பதன் மூலம் என்னை சிந்திக்கவைத்தவரும் இவரே. அத்துடன் உயர்தர மாணவர்களின் ஒழுக்க நலன்களில் பெரிதும் பங்காற்றிய பிரதி அதிபா மகேஸ்வரனும் மறக்க முடியாத ஒருவர்.

இவ்வாறு என் வாழ்கையில் மாத்திரமல்ல பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய கல்லுரிச்சமூகத்தில் இன்று பல புதியவர்கள் வந்து இணைந்திருக்கிறார்கள்.அவர்களில் பலர் எமக்கு புதியவர்களாயிருக்கலாம் ஆனால் கல்லுரிக்கு அவர்கள் பழையவர்களே. இன்று நான் பழையமாணவனாக கல்லூரிக்கு செல்லும்போது உலகளாவிய பழைய மாணவர்களின் ஆதரவுகளின் வெளிப்பாடுகளும் புதிய துடிப்பான அதிபரின் நிர்வாக திறமையும் எமது கல்லூரிக்கு புதிய மெருகூட்டிக்கொண்டிருப்பதை உணர்கின்றேன். பழையமாணவர்சங்க பிரதிநிதியாக இருப்பதன் மூலம் எனது கல்லூரிச்சமூகத்துக்கு நிறையவே பங்களிக்கக்கூடியதாக இருப்பதையும் உணர்கிறேன்
“வாழிய யாழ் நகர் இந்துக்கல்லூரி

அலங்கார வளைவுகளைத்தாண்டிய பின்னும்அரங்கிற்குள் நுழையத்தயங்கி நின்றது கவிதை!''
உன்னைப்பற்றித்தான்பேசுகிறார்கள்!உள்ளே போ''உபசரித்தார் ஒருவர்!
உள்ளேநிற்கவும் இடமில்லாநெருக்கடி!
அலட்டிக் கொள்ளத் தெரியாதமேடைவரை நடந்துபோய்மீண்டும் திரும்பிஇருக்கை தேடிஏமாற்றமடைந்தது!
சாகித்ய மண்டலசண்ட மாருதங்கள்..ஞானபீடவாணவேடிக்கைகள்..
இசங்களைக் கரைத்துரசங்களாய் குடித்தவர்கள்..த
மிழ்செத்துப் போய்விடக்கூடாதேஎன்றகருணையால்பேனாவைப் பிடித்திருக்கும்பிரும்மாக்கள்...
ஒருவர் கூடகவிதையைஉட்காரச் சொல்லவில்லை!
இடம் தேடும் கவிதையைஏறிட்டும் பார்க்கவில்லை!சுற்றிச் சுற்றிப் பார்த்துசோர்ந்த கவிதைஅரங்கிலிருந்துவெளியே வந்தது!
விமர்சனத்தின்கிழக்கு மேற்கு அறியாதகிராமத்து ரசிகர் ஒருவர்கேட்டார்:''உன்னைப் பற்றித்தான்விவாதம் நடக்கிறது..
நீயே வெளியேறுவதுநியாயமா?''
கவிதை அவரிடம்கனிவுடன் உரைத்தது:''அவர்களின் நோக்கமெல்லாம்என்னைப் பற்றிவிவாதிப்பது அல்ல..தம்மைப் பற்றித்தம்பட்டம் அடிப்பதே!''
- மு.மேத்தா

கோயிங் டவுண்

Posted by Thava ஞாயிறு, 16 நவம்பர், 2008 0 comments

நான் நினைப்பதுபோலவே எனது செயல்கள் போலவே என்னைச்சார்ந்தவர்களும் நான் நேசிக்கின்றவர்களும் நினைக்கவேண்டும் செய்யவேண்டும் என விரும்புவது நியாயமில்லை என்பது எனக்கு தெரியும் ஆனால் சில நேரங்களில் இவற்றினை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.அதற்கு வடிகால் வலைப்பதிவு தான் போலும்.யாழ் பல்கலைக்கழகத்தில் ”கோயிங் டவுண்” மகிழ்வு கொண்டாட்ட நிகழ்வு சம்பந்தமான உரையாடல் என்னை கோபத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுவிட்டது நான் இப்படியான நிகழ்வுகளில் என்ன நடைபெற்றது என விலாவாரியாக விசாரிப்பதுண்டு அப்படி சென்று கொண்டிருந்த உரையாடல் ”இன்றும் மது அருந்தி கூத்தடித்தார்களா” என விரிந்தது ”ஆம்” இது பதில் ”இது எல்லாம் தேவைதானா பாடுங்கள் ஆடுங்கள் கதையுங்கள் சிரியுங்கள் அதைவிடவும் இப்படியான மது அடித்து கூத்தடிக்கும் போதையில் உழலும் நடவடிக்கைகளும் அவசியம்தானா? ஒருபகுதியினர் (விரிவுரையாளர்கள்) பார்த்திருக்க முடியாது செல்லும் அளவுக்கு நடைபெறும் இப்படியான நிகழ்வுகள் எந்த அடிப்படையில் நடைபெறுகின்றன ” என நீண்டு சென்றது எனது வாதம்.எதுவித பங்களிப்புமின்றி வெறும் பார்வையாளராகவே இருந்து விட்டு வந்த எனது எதிர்வாதி சொன்னது தான் என்னை பாதித்து விட்டது ”இது எனக்கு தப்பாகப்படவில்லை” என்று இச்செயல்களை நியாயப்படுத்துகிறார் இவர்.பார்ட்டி ஒன்று நடந்தால் எல்லாம் இருக்கும் என்று இவர் பார்டிகள் பற்றி எனக்கு படிப்பிக்கின்றார்.


இவ்வாறான நிகழ்வுகள் எந்த மரபுமுறைகளின் கீழ் முன்னெடுத்தச்செல்லப்படுகின்றன. பெற்றோரின் பணத்தில் இவர்களின் கூத்து எந்தவகையில் நியாயமாகமுடியும் மகழ்வுடன் உங்கள் பிரிவை சந்திக்க மக்கள் வரிப்பணத்தில் படிக்கும் நீங்கள் தெரிவுசெய்யும் வழிமுறைகள் தான் நாளை பல இடங்களில் கீழ்த்தரமான முறையில் பார்ட்டிகளை கொண்டாடும் சமூக சீரளிவுகளாக பரிணமிக்கின்றது என்பது உங்களுக்கு தெரியாதா? முன்னையவர்கள் செய்தார்கள் அதனால் செய்கிறோம் என்றும் சொல்வீர்கள் இப்படித்தான் இராக்கிங் என்ற பகிடி வதைக்கும் நியாயம் கற்பிக்கிறீர்கள் இதனால் மற்றவர்களின் மனங்களை புண்படுத்தி அதிலே சுகம் காண்கிறீர்கள்.


நீங்கள் பின்பு ஒன்றும்தெரியாத அப்பாவிகள் போல சமூகத்துக்குள் நுழைகிறீர்கள் மற்றவர்களை வழிநடத்த முனைகிறீர்கள்.உங்களை வித்தியாசப்படுத்தி காட்ட இப்படியான முகவரிகள் உங்களுக்கு தேவைப்படகின்றனவோ?. உங்களுக்காகவும் உங்கள் உறவுகளுக்காகவும் கமலகாசன் பிறந்தநாளை கொண்டாடமல் இருக்கிறார் விஜய் உண்ணாவிரதமிருக்கிறார் நீங்கள் ஏதோ பொங்கு கொண்டாடிக்களைத்தவர்களாக கூத்தடிக்கிறீர்களா? பிரகடணங்களுக்கு முன் நின்று புகைப்படங்கள் எடுப்பதால் நீங்கள் உணர்வுள்ளவர்கள் என்று நாம் நம்பவேண்டும்? நீங்கள் நிகழ்வுகளில் அப்படியெல்லாம் நடந்துகொள்வதன்மூலம் நீங்கள் செய்தவைகள் எல்லாம் வெறும் கேலிக்கூத்துத்தான் போட்டீர்களா என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது.உணர்வு புர்வமாக நடந்த நிகழ்வுகளை என்க்கு நன்றாக தெரியும் அதேபோல் கும்பலில் கோவிந்தா என நடந்தைவைகளையும் தெரியும் கடமை என்பதற்காய் கலந்துகொண்டவர்களையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.உணர்வு புர்வமாக நடந்த நிகழ்வுகளை கொச்சைப்படுத்தவிலை அவற்றை ஆராதிக்கிறேன். எது எப்படியோ உங்களில் அரைவாசிப்பேருக்கு சுயநலம் அதிகம் பத்தாம்பசலித்தனமான மரபுக்கொண்டாட்டங்களில் உங்களை பெரியவர்களாக காட்டவேண்டும் அல்லது முன்னிலைப்படுத்தவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கின்றது என்பது வெளிப்படை இந்நிலையில் எதிர்கால சமுதாயத்தினை நினைக்கும்போது பயமாக இருக்கிறது.


உங்களை போராடுங்கள் என்றோ பகிஸ்கரியுங்கள் என்றோ கூறவில்லை நல்லமுறையில் கொண்டாடுங்கள் என்று கூற முயற்சிக்கிறேன்.திருந்த முயற்சியுங்கள் துன்பத்திலும் மகிழ்வது நன்றேயாயினும் அர்த்தமுள்ள வகையில் மகிழுங்கள் நீங்கள் விட்டுச்செல்லும் எச்சங்களை பலர் பின்பற்ற போகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.இன்னும் என் கோபம் தணியவில்லை...

இங்கே தினம் தினம் உறவுகள் செத்தவண்ணமிருக்க கடல்கடந்து வாழும் பலா் போராட்டங்கள் உதவிகள் செய்துகொண்டிருக்க நேரடி உறவுகளான நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? உதவி செய்ய முடியாது. போராட முடியாது கூத்து்களையாவது நிறுத்தலாமல்லவா? உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நாம் வழமையாக செய்வதெல்லாம் செய்கின்றோமல்லவா? புலம்பெயா்ந்து வாழும் எனது பள்ளி நண்பனின் இணையப்படங்களை பார்க்க முடிந்தது. அவன் ஒரு பத்திரிகையாளன் பல கட்டுரைகளை வரைந்திருக்கிறான் தமிழ்மக்கள் பற்றியெல்லாம் பிதற்றியிருக்கிறான்.ஆனால் அவனது கூத்ததுப்படங்களை பார்க்க ஆபாசமாகவல்லவா இருக்கிறது. யாருக்காக எதற்காக எழுதுகிறர்கள். இவா்களா நாளை நல்லதொரு சமுதாயத்தினை உருவாக்கப்போகின்றார்கள்? புலம்பெயர்ந்து வாழும் இளைய சமுதாயத்தின் 75 சதவீதம் நமது கலாச்சாரங்களை குழிதோண்டி புதைத்துவிட்டார்கள். தமது பொழுது போக்குக்காக எம்மை திரும்பிப்பார்க்கும் இவர்களுக்கு நம்நாட்டில் இருந்து Fresh Fish தேவைப்படுகிறது. அனுப்பி வைப்பதற்கு இங்கே பேராசைக்கார பெற்றோர் இருக்கும் வரை யாரை நோவது?

இணையத்தில் அலைந்தபோது என்மனதை தொட்ட கவிதை ஒன்று
http://mukunthan.wordpress.com/2008/04/25/metha/

80களில் ஈழப்பிரச்சனை தீவிரமடைந்த போது, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்களின் செயல் பாட்டை மிகுந்த கோபத்தோடு விமர்சனம் செய்தேன்.
”அமிதாப் பச்சனுக்கு அடிபட்டு விட்டதென்றால் அலறிக் கொண்டு ஓடுகின்றார். இலங்கையிலே பட்டப்பகலில் நட்ட நடுத்தெருவில், வெட்டொன்று துண்டிரண்டாய் விழுந்து கொட்டு கொட்டென்று கொட்டும் குருதியிலே தமிழ் கடந்து கோசங்கள் போடுவதும் வஞ்சமறியாத பிஞ்சுக் குழந்தைகளின் நெஞ்சினை பெய்த அம்பு நீண்டு கிழிப்பதையும் பார்த்த பின்பும் கேட்ட பின்பும் ஓர் அதட்டல் போடக்கூட உனக்கு அவகாசம் இல்லை யென்றால் சரியாடி பராசக்தி’ என்று கேட்டேன்.

இந்திரா காந்தியையே அப்படி கேட்டிருக்கிறேன். இன்றைக்கு இருக்கிறவர்களை கேட்பதற்கு என்ன வார்த்தை இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இந்திராகாந்தி அவர்கள் மட்டும் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருப்பார்களே ஆனால் பிற்காலத்திலே அவர்களுடைய அணுகு முறையிலே பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்திருக்கும். இன்றிருக்கிற மத்திய அரசைப் பற்றிய என்னுடைய கவலையெல்லாம் இவர்கள் யாரும் ஈழத் தமிழர்களை கைதூக்கி விடவேண்டிய அவசியமில்லை.அவர்களோடு கைகுலுக்க வேண்டிய அவசியமும் கூட இல்லை. எதிரிகளின் கையில் ஆயுதங்களைக் கொடுக்காமல் இருந்தால் அதுவே எங்கள் தமிழ் ஈழத்திற்கு செய்கிற பெரிய உதவி.

சின்னத்திரை தொலைக்காட்சித்தொடர்கள்

Posted by Thava செவ்வாய், 11 நவம்பர், 2008 0 comments

இந்திய சின்னத்திரை தொலைக்காட்சித்தொடர்கள் பலவற்றை தடைசெய்தோமானால் நமது சமுதாயம் வளம்பெறும் என கருதுகிறேன்.ஒருவனுக்கு இரண்டு மனுசி என்று கதை வராத தொடர் ஏதாவது உண்டா? அதுக்கு கதையில பல நியாயப்படுத்தல்கள். அந்த தொடர்களுக்கு நம்ம சனம் குந்தியிருந்து எதிர்வு கூறிக்கொண்டிருக்க வேணுமா?. (தொடரும்)

இன்றுள்ள இளைய சமுதாயம் மது,மாது,புகைத்தல் நடவடிக்கைகள் தான் வாழ்கையின் மகிழ்ச்சி என்றும் அதனை அனுபவிக்கத்தவறினால் தாம் மற்றவா்களினின்றும் அன்னியப்படுகின்றோம் என கற்பனைசெய்து தவறான கலாச்சாரத்திற்கு தம்மை இட்டுச்செல்கின்றனா்.இவற்றுக்கு தொலைக்காட்சிகள் பல்கலைக்கழகங்களின் மகிழ்ச்சி நிகழ்வுகள் மற்றும் நண்பர்களின் ஒன்றுகூடல்கள் தான் பெரும் துணை போகின்றன என நான் கருதுகிறேன். தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்து கொண்டே செய்யப்படும் தவறுகளை இல்லை தப்புக்கு அவர்கள் தான் விலை கொடுக்கவேண்டும்.

பெண்களைப்பற்றி....

Posted by Thava திங்கள், 10 நவம்பர், 2008 0 comments

நிச்சயமாக இவர்கள் ஆண்களினை விட வாழ்க்கையில் கூடிய துன்பங்களை தாங்குகிறார்கள்.பெண்கள் ஆண்களுக்கு சமமானவா்கள் என்றெல்லாம் பேச்சளவிலும் எழுத்தளவிலும் வைத்துக்கொள்ளலாம்.ஆண்களால் செய்யக்கூடியவை அனைத்தினையும் பெண்கள் செய்யமுடியும் அது திறமைக்கு சவாலாக இருக்கலாம் .ஆனால் பெண் ஒருவள் 100 வீதம் சகிப்புத்தன்மை கொண்டவளாக இருக்க முடியுமா? ஆணொருவனால் 100 வீதமான தாயாக இருக்கமுடியுமா?.எனது அனுபவத்தில் சாதாரண வாழ்க்கையில் பெண்ணொருவளுக்கு ஏற்படும் நெருக்கடிகளும் சங்கடங்களும் இயலாமை நிலைகளும் மிக அதிகம்.ஆண்களினால் பலவற்றை சகித்துக்கொள்ள முடியும் ஆனால் பெண் ஒருவளால் இது நடைமுறைக்கு சாத்தியப்படாது.
ஒரு ஆணாக பிறந்தமைக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அதேவேளை பெண்களாக பிறந்தவர்களை வியப்பாகவே பார்க்கின்றேன்.அவா்களின் தியாகங்களுக்காக மெச்சுகின்றேன். பெண் ஒரு சபிக்கப்பட்ட பிறவி என நான் சொல்ல வருவதாகவோ இன்றி அவளின் இயலாமை குறித்து குறிப்பிடுவதன் மூலமாக ஆணாதிக்கதினை நிலைநாட்ட முயல்வதாக நீங்கள் சிலவேளை நினைக்கக்கூடும் .நான் ஆணாதிக்கத்திற்கு எதிரானவன் ஆண்களுக்குரிய சகல உரிமைகளும் பெண்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்று நினைக்கிறேன். அத்துடன் எந்தவொரு பணியும் அது பெண்களால் அல்லது ஆண்களால் மட்டும் தான் செய்யப்பட வேண்டும் என்ற வரையறை இருக்கமுடியாது இருந்தபொழுதிலும் இருவரும் இணைந்து செய்யவேண்டிய பல கடமைகள் இருக்கத்தான் செய்கின்றன.
இயல்புகளை பொறுத்தவரையில் ஆண் பெண் இருபாலருக்கும் வித்தியாசமான பல விடயங்கள் காணப்படகின்றன இந்த வகையில் தான் சில கடமைகள் அவா்களுக்கு ஏற்ற வாறு இயற்கையினால் வகுக்கப்பட்டுள்ளது. அதைனை ஒரு ஆணோ பெண்ணோ மறுக்க முடியாது. அதற்காக நாம் இதை பெண்தான் செய்யவேண்டும் என்றோ ஆண்தான் செய்யவேண்டும் என்றோ வரையறுத்துக்கொள்ள முடியாது.இயற்கை எதை அவ்வாறு வகுத்திருக்கிறது என நான் பட்டியலிட வேண்டியதில்லை ஏனெனில் அது இயற்கையானது அது நடந்தே தீரும்.
பெண் என்றால் பேயும் இரங்கும் என்று முன்னோர்கள் கூறிவைத்துள்ளார்கள்.இப்படியிருக்க கல்நெஞ்சம் கொண்ட பலர் இருக்கதான் செய்கிறார்கள்.குடும்பங்களிலே துன்புறுத்தப்படும் பெண்களை நான் கண்கூடாக கவனித்திருக்கின்றேன் இவ்வேளைகளில் நான் சிறுபையனாக இருந்தேன் அவ்வேளை என் இரத்தம் கொதித்தும் எனது இயலாமையினால் பொறுமைகாக்க வேண்டியவனாயிருந்தேன்.ஆனால் தற்போது அப்படி யில்லை தடுப்பதற்காக கொலை கூட செய்யும் அளவில் உறுதியாக இருக்கிறேன். ஏன் எனது குடும்பத்தில் கூட பல நேரங்களில் இதற்காக முரண்பட்டிருக்கின்றேன். பிழை செய்தால் அது யாராக இருந்தால் என்ன? என்னைப்பொறுத்தவரை நிராயுதபாணியான பெண்ணை யார் தாக்கிலும் பொறுக்க முடியாது.
எனக்கு இயல்பாகவே கோபம் அதிகம். அதனை பெரியளவில் குறைத்திருக்கின்றேன்.பலதடவைகள் எனது குடும்பத்தில் அம்மா சகோதரிகளுடன் வாயளவில் மோதியிருக்கிறேன் கண்டவற்றினை துாக்கி அச்சுறுத்தியிருக்கிறேன் சிறுவயதில் தங்கைமாருக்கு தாக்கியிருக்கிறேன்.ஆனால் எது சரி எது பிழை என அறியத்தொடங்கிய வயதில் இருந்து யாரையும் உண்மையாக தாக்கியது கிடையாது இனிமேலும் அப்படி செய்யவோ செய்வதை பார்திருக்கவோ முடியாது.
தொலைக்காட்சித்தொடர்களை அவதானிக்கும் போது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் குடும்ப வாழ்வில் பெண் ஆணிடம் அடிவாங்குபவளாகவே சித்தரிக்கப்படுகிறாள் இதனை நான் வெறுக்கிறேன். விருப்பமில்லையா விட்டுவிடு அதற்காக அவளுடைய வாழ்கையினை பாழாக்கும் உரிமை எந்த ஒரு ஆணுக்கும் கிடையாது என்னைப்பொறுத்தவரை பெண்களை துன்புறுத்துபவர் எவரயினும் கண்ட இடத்தில் சுடப்பட வேண்டும். எனக்கு அதிகாரமிருந்தால் இதைதத்தான் செய்வேன்!

நமது வழி

Posted by Thava ஞாயிறு, 9 நவம்பர், 2008 0 comments

எமது வட்டத்துள் இருந்து எம்மைப்பற்றி உலகம் என்ன சொல்கிறது என்று சிந்தித்தோமானால் அது சிலவேளைகளில் சூனியமாகக்கூட இருக்கலாம்.எமது நடவடிக்கைகள் மற்றவர்களை சாதகமாகவோ பாதகமாகவோ பாதித்திருக்கின்றது என்பது பல சந்தர்ப்பங்களில் நமக்கு தெரிந்திருப்பதில்லை. இவை பற்றி எமது காதுகளுக்கு எட்டும்போது அது அதிர்ச்சியாகவும் சிலவேளைகளில் ஆச்சரியமாகவும் சிலவேளைகளில் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.எது எப்படியோ நமது வழி நேரானதாகவும் நியாயமானதாகவும் உறுதியானதாகவும் இருக்குமிடத்து எம்மைப்பற்றிய அபிப்பிராயங்களும் எமது செயற்பாடுகளின் பிரதிபலன்களும் நிச்சயம் நன்றானதாகவே இருக்கும். அபிப்பிராயங்களையே முன்னிலைப்படுத்தி எமது செயற்பாடுகள் அமைந்தால் அவ்வழி எம்முடையதல்ல!

ஆண்கள் எதையும் தாங்கும் வல்லமை கொண்டவர்கள் என்றகருத்து பொதுவில் உண்டு இந்தவிடயத்தில் பெண்களும் சளைத்தவர்கள் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு அதை நான் மறுக்கவில்லை ஆயினும் 100 ஆண்களையும் 100 பெண்களையும் எடுத்தால் இயலாமையில் அழுகின்றவர்கள் கூடுதலாக நிச்சயம் பெண்களாகத்தான் இருப்பார்கள்.உதாரணத்ததுக்கு எமது குடும்பத்தில் தற்போதைய நிலையில் எந்த ஒரு சந்தா்ப்பத்திலும் நான் அழுவதில்லை(18 வயது வரை நான் அழுத ஞாபகம்! தற்போது உள்ளத்தில் அழும் சந்தர்ப்பங்கள் உண்டு) ஆனால் என்னுடைய அம்மா தங்கைகள் இயலாமையின்போது கண்ணீர் விட்டதை பார்த்திருக்கிறேன்.

நான் எனது நிறுவன நடவடிக்கைகளின்போது பலதடவை எதிர்பாராத தோல்விகளை சந்தித்திருக்கின்றேன்.ஆயினும் அதற்காக மனமுடையவில்லை எங்கோ எனக்கான பக்கங்கள் இருக்கின்றதாகவே நம்புகிறேன் அந்தப்பக்கங்களை தேடித்தேடி கையெழுத்திட்டவண்ணம் இருக்கின்றேன் என்னுடைய வாழ்வின் இறுதிவரை என்னுடைய கையெழுத்து வேட்டை தொடரும்!

சிலவருடங்களுக்கு முன்வரை எனக்கு முன்கோபம் அதிகம்!.தற்போது ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வருகிறேன்.இயன்றவரை வெற்றி கண்டிருக்கின்றேன்.இந்தப்பணியில் எனக்கு உதவுவது கூடுதலாக என் அம்மாதான். எல்லா விடயங்களையும் அவரிடம் மனம் திறந்து பேசுவேன் எனது தங்கைமார்கூட இப்படி அம்மாவிடம் மனவிட்டு பேசமாட்டார்கள். கோபத்தினை குறைப்பதற்கும் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும் நல்ல மருந்து மனதில் உள்ளதை கொட்டிவிடுவதுதான். அம்மா ஒன்றை மிகத்தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார் தன்னுடைய கருத்தை எனக்கு எப்படியாகிலும் புரியவைக்கமுடியும் என்று.எது எப்படியோ ஒருசில விடயங்களில் என்ன பாடுபட்டும் என்னை அவரால் இதுவரை மாற்ற முடியவில்லை!

ஒரு சிறிய விடயத்தினை பெரிதாக்குவதன்காரணமாகவே பிரச்சனைகள் தோன்றுகின்றன.ஆறுதலாக இருந்து சிந்தித்தால் எமக்கு அது வெட்கமானதாக இருக்கும்.ஐயோ இதற்கா இவ்வளவு ஆரவாரப்பட்டோம் என்று எண்ணுவோம். அனைத்தையும் இலகுவானதாக எடுத்தோமானால் பிரச்சனை என்பதே இல்லாமல் இருக்கும். எந்த ஒன்றுக்கும் தீர்வு இல்லாமல் இல்லை.அந்த வேளையில் அவா் அப்படி நினைத்திருப்பாரோ அல்லது இப்படி நினைத்திருப்பாரோ என பலவாறாக நினைத்து நாம் குழம்பிக்கொண்டிருப்போம் ஆனால் அவா் ஒன்றும் நினைத்திருக்கவே மாட்டார். எவா் எப்படி நினைத்தால் என்ன நமக்கு இது பிழை என்று உணரமுடிந்தால் அதனை எதிர்காலத்தில் செய்யாது தவிர்ப்போம் .ஏன் அப்படி செய்தாய் என்று கேட்பதை விட செய்தமையால் பாதிப்புற்றவரை சரிசெய்வதே மேல். விபத்து நடந்தால் விபத்துக்குள்ளானவரை முதலில் காப்பாற்ற வேண்டும்