வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

இலங்கை அரசியலமைப்பின் 99(6) (அ) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய, ஒரு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 1/20 க்கு (5%) குறைவான வாக்குகளைப் பெறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழு தகுதியற்றதாக்கப்படும். எஞ்சிய செல்லுபடியான வாக்குகள், விகிதாசாரக் கணிப்பீட்டு அடிப்படையில் ஆசனங்களை ஒதுக்குவதற்காக, கணக்கில் எடுக்கப்படுகின்றன.
குறித்த மாவட்டத்தின் உறுப்பினர் எண்ணிக்கையில் இருந்து ஒன்றினை கழித்து அந்த எண்ணிக்கையினால் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளை பிரித்து ஒரு உறுப்பினரருக்காக கட்சிச்சின்னம் பெற்றிருக்கவேண்டிய வாக்குகள் தீரமானிக்கப்படும் . அந்த அடிப்படையில் இடங்கள் ஒவ்வொரு கட்சிக்குமான வாக்குகளில் இருந்து கழிக்கப்பட்டு அதற்குரிய இடங்கள் வழங்கப்படும்.
முதல் சுற்றில் கணிப்பில் வந்த ஒரு இடம் ஒதுக்குவதற்கான வாக்குகள் போதுமானதாக இல்லாவிடில் எஞ்சிய வாக்குகளில் கூடிய வாக்குகளின் அடிப்படையில் இடங்கள் கட்சிகளுக்கு பகிரப்படும்
கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்காக கட்சிகளுக்குள் விருப்பு வாக்கு ஒழுங்கில் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவர்
மாவட்டத்தில் கூடிய வாக்கு பெற்ற கட்சிக்கு முதலில் கழித்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு இடம் வழங்கப்படும்
இதனால் மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் வாக்கு பெற்ற கட்சிக்கும் உறுப்பினர்கள் பகிரப்பட வாய்ப்பு உண்டு அதேவேளை கிடைக்கும் இடங்கள் கட்சிக்குள் பகிரப்படும்போது அங்கு குறைந்த விருப்பு வாக்கு பெறும் உறுப்பினரும் தெரிவுசெய்யப்படலாம்.
உதாரணம் -வன்னி மாவட்டம்
---------------
மாவட்டத்தில் அழிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 1000
மாவட்டத்திற்கான உறுப்பினர் எண்ணிக்கை 6
கட்சிகள் பெற்ற வாக்குகள்
A = 501
B =302
C =197
D =0
என வைத்துக்கொள்வோம்
இங்கே 5 வீதத்திற்கு மேலாக 3 கட்சிகள் பெற்றுள்ளன
A B C கவனத்தில் கொள்ளப்படும்
S= 6-1 =5 கணிப்புக்குரிய இடங்களின் எண்ணிக்கை (S)
N= 1000/5 =200 (முதலாவது சுற்றில் ஒரு இடத்தினை பெற ஒரு கட்சி தரவேண்டிய வாக்குகள்)
அதன்படி
A இற்கு 2 இடங்கள் போன பின் (501-400) =101 வாக்குகள் உள்ளன
B இற்கு 1 இடம் போன பின் (302-200) =102 வாக்குகள் உள்ளன
C இற்கு 197 வாக்குகள் உள்ளன முதற்சுற்றில் இடம் வழங்கப்பட போதாது
இனி பிரித்து தெரிவு செய்யப்பட வேண்டி 2 இடங்கள் உள்ளன அவை மிஞ்சிய வாக்குகள் எண்ணிக்கை ஒழுங்கில் பார்த்தால்
முதலாவதாக C இற்கு ஒன்றும் பின்னர் B இற்கு ஒன்றும் வழங்கப்படும். ஆரம்பத்தில் கழித்து ஒதுக்கிய ஒரு இடம் ஆகக்கூடிய வாக்குகள் பெற்ற கட்சியான A இற்கு வழங்கப்படும்
எனவே கட்சிகள் பெறும் இடங்கள் வருமாறு அமையும்
A : 3
B : 2
C : 1
இலங்கையின் மொத்த 225 உறுப்பினர்களில் மொத்தமாக 196 பேர் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட
தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் 29 பேர் தேசிய ரீதியில் கூடுதலாக எடுத்த வாக்குகளின் அடிப்படையில் கட்சிகளுக்கு பகிரப்படும்
அதில் பெரும்பாலும் தேசியக்கட்சிகளே கூடியளவில் சுவீகரிக்கும்
மாவட்ட ரீதியில் தெரிவுசெய்யப்பட வெண்டிய தமிழர் மாவட்ட பாராளுமன்ற இடங்கள் வருமாறு
யாழ்ப்பாணம் - 7
வன்னி - 6
மட்டக்களப்பு - 5
திருகோணமலை -4
அம்பாறை -7
வாக்காளர் ஒருவருக்கு 4 வாக்குகள் உள்ளன ஒரு வாக்கு கட்சி சின்னத்திற்கும்(கட்டாயமானது ) ஏனைய 3 வாக்குகள் (கட்டாயமானவை அல்ல)விருப்பு வாக்குகள் விரும்பிய 3 வேட்பாளர் இலக்கங்களுக்கும் வழங்கலாம்(அதிலும் வாக்குகளில் எத்தனையினையும் பயன்படுத்தலாம்). கட்சிக்கு வழங்காமல் விருப்பு வாக்கு வழங்க முடியாது

Facebook Security

Posted by Thava ஞாயிறு, 12 ஜூலை, 2015 0 comments

தேவையற்ற Link களை Click செய்தமையால் பாதிக்கப்பட்ட நண்பர்களின் பெயரில் பலருடய Face book சுவர்களில் அவர்களது அனுமதியின்றியே பகிரப்பட்ட ஆபாசப்படங்களை கடந்த சில தினங்களாக காணமுடிந்தது. உங்கள் அனுமதி இன்றி உங்கள் பெயர்களை படங்களில் Tag செய்வதினை தடுக்க வழி இதோ
Setting பகுதியில் Timeline and Taging என்ற பகுதியில் Who can add things to my timeline? என்ற வினாவிற்கு விடையாக Review posts that friends tag you in before they appear on your Timeline? என்ற தெரிவை On செய்து விடுங்கள் உங்கள் அனுமதியின்று உங்கள் சுவரில் படங்கள் எதுவும் வராதுhttps://www.facebook.com/settings?tab=timeline

2013 நிலவரப்படி இலங்கையில்
சுமார் 205 லட்சம் மக்கள் உள்ளனர்
100 லட்சம் ஆண்களும் 105 லட்சம் பெண்களும் உள்ளனர்
திருமணம் செய்வோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தவண்ணம் உள்ளது .புலம் பெயர்வு அதிகரித்தவண்ணம் உள்ளது





முகப்புத்தகத்தின் புள்ளி விபரப்பகுதிக்குள் சென்ற போது அதிகமாக பயன்படுத்தும் முகப்புத்தக பாவனையாளர் தொடர்பிலான முழு புள்ளிவிபரங்களும் பெறக்கூடியதாக இருந்தது. இன்றைய நிலவரப்படி இலங்கையில் 20 லட்சம்  தொடக்கம் 30 லட்சம் வரையிலான மாதாந்த பாவனையாளர்கள் காணப்படுகின்றனர்.அதில் 30 வீதம் மட்டுமே பெண்கள் 70 வீதமானவர்கள் ஆண்கள்.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 25 ஆயிரம் வரையிலான செயற்படுநிலை பயனாளர்கள் உள்ளனர்.கிளிநொச்சியில் 6 ஆயிரம் வரையிலும் முல்லைத்தீவில் 2 ஆயிரம் வரையிலும் மன்னாரில் 7000 வரையிலும் வவுனியாவில் 15 ஆயிரம் வரையிலும்
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் 30 ஆயிரம் வரையிலும் திருகோணமலையில்  25 ஆயிரம் வரையிலும் அம்பாறையில் 10 ஆயிரம் வரையிலும்  செயற்படு பாவனையாளர் உள்ளனர்

இலங்கையில் பாவனையாளர்களில் 57 வீதம் திருமணமாகாதவர்கள் 29 வீதம் திருமணமானவர்கள்

இலங்கையில் பயனாளர்களில் 80 வீதமானவர்கள் பல்கலைக்கல்வி பெற்றவர்கள் அல்லது பெற்றுக்கொண்டிருப்பவரகள்

உலகளாவியரீதியில் 1 பில்லியனுக்கும் அதிகமான செயற்படுநிலை (Active) பாவனையாளர்கள் இருக்கின்றனர் அவர்களில்  55 வீதம் ஆண்கள் 45 வீதம் பெண்கள்

மொத்த மாதாந்த செயற்படு நிலை பாவனையாளரில் 0.2 வீதமானவர்களே இலங்கையர் முதலாவது இடத்தில் அமெரிக்காவும்(14%)  இரண்டாவது இடத்தில் இந்தியாவும்(9%) இருக்கின்றது .

இந்தியாவில் 150 மில்லியன் வரையிலான பயனாளர்கள் உள்ளனர்.(24 வீதம் பெண்கள் 76 வீதம் ஆண்கள்) தமிழ்நாட்டில் 10 மில்லியன் வரையிலான பயனர்கள் உள்ளனர் அதிலும் சென்னையில் 4.5 மில்லியன் வரையிலான பயனர்கள் உள்ளனர் சென்னைக்கு (53%) அடுத்தபடியாக கோயம்புத்தூரிலும்(9%) அடுத்த மதுரை (4%) சேலத்திலும் (3%) உள்ளனர்





யாருக்கு வாக்களிப்பது?

Posted by Thava சனி, 4 ஜூலை, 2015 0 comments

வருகின்ற தேர்தல் தொடர்பிலான வாக்களிப்பு தொடர்பில் எனது இறுதி நிலைப்பாடு என்ன என்று என்னாலேயே தீர்மானிக்க முடியவில்லை.
அதற்காக வருந்தவில்லை

மகிந்த பற்றி நாம் பேசிக்கொள்வதால் அல்லது அவரது வருகையின் விளைவு பற்றி நாம் ஆராய்வதிலும் பலனில்லை. தேசிய ரீதியில் ஏற்படப்போகும் அந்த மாற்றத்தால் எமக்கு எந்த விளைவும் இல்லை காரணம் அதனால் பாதிக்கப்படபோவது சிங்கள மக்கள் தான் அதனை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.அவரது வெற்றியும் தோல்வியும் சிங்கள மக்களின் கையில் மட்டுமே இப்போது உள்ளது.

இங்கு நாம் எமது பிரதேச அரசியலை எடுத்துக்கொண்டால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எங்களின் தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது எனினும் அவர்களது கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது என்ன நிலையில் இருந்ததோ அந்த நிலையில் தற்போது இல்லை. நிறைய பேர் வெளித்தள்ளப்பட்டனர் அல்லது வெளியேறினர் புதியவர்கள் பலர் நுழைந்தனர். ஆகமொத்தத்தில் அது உருமாற்றம் பெற்றுவிட்டது.

கூட்டமைப்பின் நடவடிக்கைகளில் முக்கிய பங்குவகிக்கும் தமிழரசுக்கட்சி உண்மையில் சனநாயகப்பண்புகளை பேணவில்லை. அடிப்படை கட்சி கட்டமைப்புக்களை பேணவில்லை .பெயரளவில் மாத்திரம் அது இருக்கிறது தவிர முடிவுகள் ஒரு சிலரால் மட்டுமே எடுக்கப்படுகின்றன.

சிறந்த எதிர்கால அரசியல் தலைமை வளர்த்தெடுக்கப்படவில்லை அல்லது அதற்கு அவர்கள் விரும்பவில்லை. இந்நிலையில் தமது இருப்புக்களுக்காகவும் பதவிகளுக்காகவும் பிழைகளை சுட்டிக்காட்ட பலரும் தயங்குகின்றனர்

தமிழ்தேசியமக்கள் முன்னணியும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் அடி்ப்படையில் இனப்பிரச்சனைக்குரிய தீர்வு தொடர்பில் கொள்கை  ஒற்றுமை உடையவர்களாகவே உள்ளனர் ஆனால் பெயர்களால் மாயாஜாலம் செய்கின்றனர்.தேசம் நாடு என்பன இரண்டும் ஒன்று என்றும் சிலர் கூறுகின்றனர் .State Province Country என்றவற்றில் வித்தியாசங்களை நுணுக்கமாக ஆராய்ந்து கொண்டிருக்கும் மனநிலையில் மக்கள் இல்லை என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.அதில் தெளிவு ஏற்படுத்துவதும் கடினம். அனைவரும் ஒற்றையாட்சிதான் வலியுறுத்துகின்றனர்

அப்படிப்பார்த்தால் ஒற்றையாட்சியினை தீர்வுக்கு சரிவராது என்று சொல்லும் கூட்டமைப்பு எந்தவகையிலும் மக்கள் முன்னணிக்கு சளைத்ததாக இருக்காது .

இங்கு முக்கிய விடயம் என்னவென்றால் இப்போது  ஒற்றையாட்சினை வலியுறுத்தும் சத்தியப்பிரமாணத்தில் கையெடுத்திடும் பராளுமன்ற  உறுப்பினர் பதவிக்காகதான் இரண்டும் போட்டியிடுகின்றன.கூட்டமைப்பின் நடவடிக்கைள் போக்குகளில் விரக்தியுற்றவர்களின் களமாக மக்கள் முன்னணி திகழ்கின்றது. கூடுதலாக இளைஞர்களின் ஆதரவினை அது கொண்டிருக்கின்றது

ஆரம்பத்தில் ஆதரவு குறைந்திருந்த அந்த கட்சி தற்போது ஆதரவினை பெற்று வருகின்றது. அதற்கு கூட்டமைப்பின் துாரநோக்கற்ற அரசியல் பணிகள் செயற்பாடுகள் தான் அன்றி தீர்வுக்கொள்கை தொடர்பிலான மாற்றுத்தேடலாக இந்த அணி திகழவில்லை என்று நாம் நம்புகின்றேன்.

இவ்வாறான மாற்று அணிஒன்று  இருப்பது அவசியமே அவ்வாறு இருந்தால் தான் கூட்டமைப்பு தன்னை திருத்திக்கொள்ள வழிசமைக்கும். இம்முறை முன்னணி 1 ஆசனைத்தினை பெற்றுக்கொண்டால் கூட கூட்டமைப்பு தன்னை திரும்பி யோசிக்க வைக்கும்.மாறங்களை உள்வாங்க அழுத்தத்தினை பிரயோகிக்கும் .

தொடர்ந்து தாயகம் விடுதலை மற்றும் புலி கோசங்கள் தமிழ் தேசிய அரசியலுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பமுடியாது அதற்கும் ஒரு கால வரையறை உண்டு யுத்தம் முடிந்து 6 ஆண்டு கள் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து அவ்வாறான உணர்ச்சி நிலைகள் நவீன அரசியலுக்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

இந்நிலையில் முன்னாள்போராளிகளை கொண்டு  செய்யப்படும் அரசியல் எந்தவகையிலும் உணர்ச்சிகரமானதாக அமையப்போவதில்லை.

இது வரை அரசுடன் இணைந்திருந்த ஈபி டீபி போன்ற கட்சிகள் தமது இருப்பினை தமது வாக்கு வங்கிகளின் ஊடாக தக்கவைக்க பகீரத பிரயத்தனம் செய்தவிண்ணம் உள்ளன அத்துடன் சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியும் தமது வாக்கு வங்கியினை அதிகரித்து ஒரு இடத்தினையாவது கைப்பற்றிவிடவேண்டும் என துடிக்கின்றன. இல்லாவிடடால் அவர்களால் தேசிய ரீதியில் கிடைக்கும் போனஸ் ஆசனத்துக்கான வாக்கு வங்கியில் அதிகரிப்பாவது  காட்ட முனைகின்றன.

மற்ற போட்டியிடப்போகும் உதிரிக்கட்சிகள் சுயேட்கைள் பற்றி கதைக்கவே தேவையில்லை.கட்டுப்பணத்தினை இழந்து போகும் நிலைதான்

யாழ் மாவட்டத்தி்ல் இருப்பதோ 7 இடங்கள் கூட்டமைப்பு 5 இனை பெறுவதற்கு வாய்ப்பு உண்டு 4  பெறுவது உறுதி.

கூட்டமைப்பின் மீதான ஆற்றாமையினை கொட்டுவதற்கான அல்லது கூட்டமைப்பு எதிர்காலத்தில் தன்னை மாற்றிக்கொள்ள அழுத்தம் பிரயோகிப்பதற்காக  மக்கள் முன்னணிக்கும் வாக்களிப்பது தவறாகப்படவில்லை. மக்கள் முன்னணியினை ஆதரிப்பவர்களில் பலர் கூட்டமைப்பினையும் ஆதரி்கின்றார்கள் அவர்களுக்கு ஆட்கள் தான் பிரச்சனை கூட்டமைப்பின் உட்கட்சி சனநாயகம்தான் மிகப்பெரிய பிரச்சனை.இந்நிலையில் அதில் எந்தக்கட்சிக்கு வாக்களித்தாலும் தமிழ்த்தேசியத்துக்குதான் வாக்களிப்பதாக இருக்கும் என கருதுகின்றேன்

தேர்தலை புறக்கணிக்கச்சொன்னவர்கள் புறக்கணித்தவர்கள் அதனால் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு வாக்களித்தாலும் அது பிழையில்லை என்று எப்படி சொல்ல முடியும் என நீங்கள் கேட்டால் அவர்கள் கூட்டமைப்பினை எதிர்க்க வேண்டும் என்ற காரணத்துக்காக தான் தங்களை அவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தவே அவ்வாறு செய்தார்களே தவிர வேறு ஒன்றும் இல்லை என்றுதான் நான் கருதுகின்றேன்.இதை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்பது வேறு கதை.

இரண்டு தரப்பும் பாராளுமன்றத்துக்கு சென்று தீர்வு தொடர்பில் எதுவும் சாதிப்பார்கள் என்று நான் கருதவில்லை. சிங்களவன் மனம் வைக்காத வரை எதுவும் நடடைபெறாது . எமது பிரச்சனைகளை பற்றி குரல் கொடுக்க பிரதிநிதிகள் செல்கிறார்கள் என்று திருப்திப்படலாம். அவ்வளவுதான். முன்னைய அரச ஆதரவு உதிரி கட்சிகள் போல இவர்கள் ஒருபோதும் மகிந்தவை ஏற்கவில்லை. மகிந்த இருந்திருந்தால் தீர்வு கிட்டியிருக்கும் என்றும் கூறியிருக்கவில்லை.

உண்மையில் தமிழ் மக்களின் தீர்வுக்காக இணக்கமின்றி தீவிரமாக போராடுபவர்களாக இருந்தால் இவர்கள் அனைவரும் பாராளுமன்ற தேர்தலையும் புறக்கணித்திருக்கலாம். அதுவும் போராட்டம் தான் அப்படி செய்மாட்டார்கள். அது தவறுமில்லை.ஆக மொத்ததில் மோதகமும் கொழுக்கட்டையும் தான்.தென்னிலங்கையில் ஐக்கியதேசயகட்சியும் சுதந்திரக்கட்சியும் போல தான்.

என்னைக்கேட்டால் எதிர்காலத்தில் மக்கள் முன்னணி மகாணசபை உள்ளுராட்சி சபை அனைத்திலும் போட்டியிடவேண்டும் ஒரு சில இடங்களையாவது கைப்பற்றி கூட்டமைப்பிற்கு தலையிடியாக இருப்பதன் மூலம் எமக்கான தமிழ் தேசிய அரசியல் வலுவடையும்.

வீட்டுக்கா சைக்களுக்கா வாக்களிக்கபோகின்றீர்கள் என கேட்டால் இன்னும் முடிவில்லை என்பது தான் என் பதில்.இப்படித்தான் இங்கு பலரும்.அதனால் தமிழ்த்தேசியத்திற்கு பாதிப்பு என்று நான் கருதவில்லை எதோ ஒன்றை எல்லோரும் தெரிவுசெய்யபோகின்றோம் சுவை மாறாது.

தேர்தல் பார்வை தொடரும்..