வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

யாரை நோவது?

Posted by Thava வியாழன், 10 ஜூன், 2010

எமது போராட்டம் கருணாநிதியை கேட்டு தொடங்கப்படவில்லை.கருணாநிதியையோ இந்தியாவையோ இல்லை ஒபாமாவையோ அல்லது பான்கிமூனையொ நம்பியோ தமிழர்களுக்கான இன விடுதலைப்பொராட்டம் தொடங்கப்படவில்லை.இலட்சியத்திற்காக முடிந்தவரை போராடி கடைசியில் இந்த நிலை

இதுவரை நாம் என்ன செய்தோம் செய்கிறோம் என சுயவாசிப்பு செய்தாலே போதும் சகலதுக்கும் விடை வெளிக்கும்.இன்று பலரும் இந்திய எதிர்ப்பு உலக எதிர்ப்பு கருத்துக்களை அள்ளிவீசுகின்றனர். அனைத்துத்தரப்பும் ஒன்றிணைந்துதான் எமது போராட்டம் ஒடுக்கப்பட்டது.அதிலே எமது தரப்புக்கும் பங்குண்டு

எது நடந்ததோ அது நடந்து முடிந்துவிட்டது இனி சுயவிமர்சனம் செய்து பிழைகளை திருத்தி நடக்கவேண்டியவற்றினைப்பார்க்கவேண்டும். அதைவிடுத்து அறிக்ககைகள் ஆதங்கங்களை மட்டும் விட்டுக்கொண்டிருப்பதும் நாம் நல்லபடி விரும்பியபடி வாழ்ந்து கொண்டு அழிவுகளில் இருந்து மீளத்துடிக்கும் மக்களை வைத்து அரசியல் நடத்துவது அநியாயம். அவர்களின் விடிவுக்கு இனி எவ்வாறு உதவலாம் எவ்வாறு எமது அடையாளங்களையும் பிரதேசங்களையும் கட்டிஎழுப்பலாம் என்று யோசிக்கவேண்டும்


புதிய அறிவியல் உலகிற்கு எமது மக்கள் அனைவரையும் அழைத்துச்செல்ல என்னசெய்யலாம் எமது அரசியல் உரிமைகளை எப்படி நிலைநிறுத்தலாம் என சிந்திப்பதைவிடுத்து தொடந்து வசைபாடிக்கொண்டிருப்பதில் எந்தவித இலாபமும் இல்லை அதன்மூலம் எம்மை தேசியவாதிகளாக காட்டிக்கொ்டிரக்கலாமே தவிர வேறொன்றுமில்லை.

தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு நடிகர்கள் வரக்கூடாதென்று அங்கே தடுக்கிறர்கள் ஆனால் நாம் என்னசெய்கிறொம் அப்படி வந்த நிகழ்வுகளை புறக்கணித்தோமா இல்லையே தவறாமல் சென்று கூத்தாடினீர்களே? மகழ்ச்சி நிகழ்வுகளை நாம் நடா்த்தாமல் விட்டிருக்கிறோமா?

கனக்க வேண்டாம் சகலரும் சண் தொலைக்காட்சியை பார்காமல் தவிர்பீர்களா மக்கள் இங்க நோகிறாங்க உங்களுக்கு என்ன 20 20 கிரிக்கட் வேண்டிக்கிடக்கு.சும்மா ஒரு நடிகர் ஏதோ சொல்லிவிட்டார் என்பதற்காக அவரது படத்ததையே திரையிடவிடமாட்டோம் என குழு தொடங்கிறீங்க இப்படியே எல்லாத்தைதும் எமது போராட்டத்தின் ஒரு பரிணாமத்தின் முடிவுக்கு(பேிரச்சனை இருக்கும் வரை போராட்டம் முடியாது) காரணம்சொல்லி யாரையோ நொந்துகொண்டிருக்கிறோம்

துரையப்பா விளையாட்டரங்கில் துள்ளியாடுகிறார்கள். வெளிநாடுகளில் வெள்ளைகளுடன் விதம்விதமாய் ஆடுகிறார் எமது எதிர்காலத்துக்காய் என்னவெல்லாமோ செய்கிறோம் அந்த நொந்தமக்களை மீண்டுவர சந்தர்பம் கொடுக்கிறோமா மீண்டும் மீண்டும் ஒரு இக்கட்டான சூழலுக்குள் வைத்திருக்க உணர்ச்சி அரசியலை உசாத்துணைக்கு அழைக்கிறோம்.

அய்யோ வேண்டாம் அவர்களை விடுங்கள் நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு உங்கள் மனதளவில் நேர்மையாக இருக்கப்பாருங்கள் சகலரும் நம்நாட்டில் நம் இனத்திற்கு என்ன நடக்கிறது அதை எப்படி எதிர்கொள்ளலாம் நாம் சார்ந்த சமூகத்தின் ஊடாக நிறுவனங்களின் ஊடாக எவ்வாறு எமது நொந்த மக்களுக்கும் வெந்தபுண்களுக்கும் ஆறுதல் கூறலாம் நல்வழி காட்டலாம் இனிமேலும் அழிந்துபோவதை தடுக்க என்ன செய்யலாம் சிதைந்த அடையாளங்களையும் பொருண்மியங்களையும் எவ்வாறு துாக்கி நிமித்தலாம் என சிந்தித்தால் செயற்பட்டால் விடிவு வெகுதுாரத்தில் இல்லை அதை விடுத்து அவனாலதான் கெட்டன் இவனாலதான் கெட்டன் என்று புலம்புவதில் பலனில்லை.

மற்றைவனை நம்பியவன் எல்லாம் வெற்றிபெற்றதாய் சரித்திரம் இல்லை


-தவா

0 comments

கருத்துரையிடுக