வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

பெண்களைப்பற்றி....

Posted by Thava திங்கள், 10 நவம்பர், 2008

நிச்சயமாக இவர்கள் ஆண்களினை விட வாழ்க்கையில் கூடிய துன்பங்களை தாங்குகிறார்கள்.பெண்கள் ஆண்களுக்கு சமமானவா்கள் என்றெல்லாம் பேச்சளவிலும் எழுத்தளவிலும் வைத்துக்கொள்ளலாம்.ஆண்களால் செய்யக்கூடியவை அனைத்தினையும் பெண்கள் செய்யமுடியும் அது திறமைக்கு சவாலாக இருக்கலாம் .ஆனால் பெண் ஒருவள் 100 வீதம் சகிப்புத்தன்மை கொண்டவளாக இருக்க முடியுமா? ஆணொருவனால் 100 வீதமான தாயாக இருக்கமுடியுமா?.எனது அனுபவத்தில் சாதாரண வாழ்க்கையில் பெண்ணொருவளுக்கு ஏற்படும் நெருக்கடிகளும் சங்கடங்களும் இயலாமை நிலைகளும் மிக அதிகம்.ஆண்களினால் பலவற்றை சகித்துக்கொள்ள முடியும் ஆனால் பெண் ஒருவளால் இது நடைமுறைக்கு சாத்தியப்படாது.
ஒரு ஆணாக பிறந்தமைக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அதேவேளை பெண்களாக பிறந்தவர்களை வியப்பாகவே பார்க்கின்றேன்.அவா்களின் தியாகங்களுக்காக மெச்சுகின்றேன். பெண் ஒரு சபிக்கப்பட்ட பிறவி என நான் சொல்ல வருவதாகவோ இன்றி அவளின் இயலாமை குறித்து குறிப்பிடுவதன் மூலமாக ஆணாதிக்கதினை நிலைநாட்ட முயல்வதாக நீங்கள் சிலவேளை நினைக்கக்கூடும் .நான் ஆணாதிக்கத்திற்கு எதிரானவன் ஆண்களுக்குரிய சகல உரிமைகளும் பெண்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்று நினைக்கிறேன். அத்துடன் எந்தவொரு பணியும் அது பெண்களால் அல்லது ஆண்களால் மட்டும் தான் செய்யப்பட வேண்டும் என்ற வரையறை இருக்கமுடியாது இருந்தபொழுதிலும் இருவரும் இணைந்து செய்யவேண்டிய பல கடமைகள் இருக்கத்தான் செய்கின்றன.
இயல்புகளை பொறுத்தவரையில் ஆண் பெண் இருபாலருக்கும் வித்தியாசமான பல விடயங்கள் காணப்படகின்றன இந்த வகையில் தான் சில கடமைகள் அவா்களுக்கு ஏற்ற வாறு இயற்கையினால் வகுக்கப்பட்டுள்ளது. அதைனை ஒரு ஆணோ பெண்ணோ மறுக்க முடியாது. அதற்காக நாம் இதை பெண்தான் செய்யவேண்டும் என்றோ ஆண்தான் செய்யவேண்டும் என்றோ வரையறுத்துக்கொள்ள முடியாது.இயற்கை எதை அவ்வாறு வகுத்திருக்கிறது என நான் பட்டியலிட வேண்டியதில்லை ஏனெனில் அது இயற்கையானது அது நடந்தே தீரும்.
பெண் என்றால் பேயும் இரங்கும் என்று முன்னோர்கள் கூறிவைத்துள்ளார்கள்.இப்படியிருக்க கல்நெஞ்சம் கொண்ட பலர் இருக்கதான் செய்கிறார்கள்.குடும்பங்களிலே துன்புறுத்தப்படும் பெண்களை நான் கண்கூடாக கவனித்திருக்கின்றேன் இவ்வேளைகளில் நான் சிறுபையனாக இருந்தேன் அவ்வேளை என் இரத்தம் கொதித்தும் எனது இயலாமையினால் பொறுமைகாக்க வேண்டியவனாயிருந்தேன்.ஆனால் தற்போது அப்படி யில்லை தடுப்பதற்காக கொலை கூட செய்யும் அளவில் உறுதியாக இருக்கிறேன். ஏன் எனது குடும்பத்தில் கூட பல நேரங்களில் இதற்காக முரண்பட்டிருக்கின்றேன். பிழை செய்தால் அது யாராக இருந்தால் என்ன? என்னைப்பொறுத்தவரை நிராயுதபாணியான பெண்ணை யார் தாக்கிலும் பொறுக்க முடியாது.
எனக்கு இயல்பாகவே கோபம் அதிகம். அதனை பெரியளவில் குறைத்திருக்கின்றேன்.பலதடவைகள் எனது குடும்பத்தில் அம்மா சகோதரிகளுடன் வாயளவில் மோதியிருக்கிறேன் கண்டவற்றினை துாக்கி அச்சுறுத்தியிருக்கிறேன் சிறுவயதில் தங்கைமாருக்கு தாக்கியிருக்கிறேன்.ஆனால் எது சரி எது பிழை என அறியத்தொடங்கிய வயதில் இருந்து யாரையும் உண்மையாக தாக்கியது கிடையாது இனிமேலும் அப்படி செய்யவோ செய்வதை பார்திருக்கவோ முடியாது.
தொலைக்காட்சித்தொடர்களை அவதானிக்கும் போது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் குடும்ப வாழ்வில் பெண் ஆணிடம் அடிவாங்குபவளாகவே சித்தரிக்கப்படுகிறாள் இதனை நான் வெறுக்கிறேன். விருப்பமில்லையா விட்டுவிடு அதற்காக அவளுடைய வாழ்கையினை பாழாக்கும் உரிமை எந்த ஒரு ஆணுக்கும் கிடையாது என்னைப்பொறுத்தவரை பெண்களை துன்புறுத்துபவர் எவரயினும் கண்ட இடத்தில் சுடப்பட வேண்டும். எனக்கு அதிகாரமிருந்தால் இதைதத்தான் செய்வேன்!

0 comments

கருத்துரையிடுக