வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

யாழ்ப்பாணத்தில் சிறீலங்காரெலிகொம் , டயலொக் ,மொபிடெல் , லங்காபெல், சண்ரெல் நிறுவனங்கள் தமது சேவையினை வழங்கிவருகின்றன. சிறீலங்காரெலிகொம் கேபிள் தொலைபேசி இணைப்புக்களையும் சீ.டி.எம்.ஏ தொலைபேசி இணைப்புக்களையும் வழங்கி வந்தது சண்டெல் நிலையான கம்பியில்லா தொலைபேசிச்சேவையினை வழங்கிவந்தது.டயலொக் மற்றும் மொபிடெல் நிறுவனங்கள் கைதொலைபேசி சேவைகளை வழங்கி வந்தது. சிறீலங்கா ரெலிகொம்மினது நிலையான கேபிள் தொலைபேசி இணைப்புக்கள் பெறுவது சற்று கடினமாக இருந்து வந்தது அதேவேளை சீ.டி.எம்.ஏ தொலைபேசி இணைப்புக்களை பெறுவதற்கு பாதுகாப்பு தரப்பினரது பாதுகாப்பு அனுமதி பெறவேண்டியிருந்தது. தற்போது அனைத்தும் முன்னேற்றகரமான நிலையினை எட்டியுள்ளது.

யாழ்ப்பாணம் சுன்னாகம் போன்ற பகுதிகளில் சிறீலங்கா ரெலிகொம்மினது நிலையான கேபிள் தொலைபேசி இணைப்புக்கள் புதிதாக வழங்கப்படுகின்றன. அத்துடன் படிப்படியாக சகல பிரதேசங்களிலும் புதிய இணைப்புக்கள் வழங்கப்படுமென உறுதி தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை சீ.டி.எம்.ஏ தொலைபேசி இணைப்புக்களை பெறுவதற்கான பாதுகாப்பு அனுமதி நடைமுறை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சீ.டி.எம்.ஏ தொலைபேசி இணைப்புக்களை மரக்கறிச் சந்தையில்கூட வாங்கிக்கொள்ளக்கூடியதாக உள்ளது. சிறீலங்கா ரெலிகொம்மிற்கு போட்டியாக டயலொக் மற்றும் லங்காபெல் நிறுவனங்களும் சீ.டி.எம்.ஏ தொலைபேசி இணைப்புக்களை வழங்கி வருகின்றன. சன்ரெல் தனது சேவையில் எந்தவொரு மாற்றத்தினையும் ஏற்படுத்தவில்லை.இந்நிறுவனம் தான் ஏற்கனவே வழங்கிய இணைப்புக்களுக்கு சேவை(?) வழங்குவதோடு மட்டும் தனது பணியை நிறுத்திவைத்துள்ளது.

இதேவேளை அகலப்பட்டை இணைய இணைப்புக்களை வழங்குவதில் சிறீலங்கா ரெலிகொம் மற்றும் டயலொக் நிறுவனங்கள் முனைப்புடன் ஈடுபட்டிருக்கின்றன.மொபிற்டெல் மற்றும் லங்காபெல் நிறுவனங்கள் விரைவில் தாமும் இதனை வழங்கவுள்ளதாக தெரிவித்து வருகின்றன.

தற்போது யாழ்மக்கள் முன்பாக இன்ரநெட் இற்கான தெரிவுகளாக சிறீலங்கா ரெலிகொம்மினது நிலையான கேபிள் தொலைபேசி இணைப்புக்களுக்கான டயலப் இணைய இணைப்புக்கள் சீ.டி.எம்.ஏ தொலைபேசி இணைப்புக்களுக்கான டயலப் இணைய இணைப்புக்கள்,சீ.டி.எம்.ஏ பீ-கார்ட் டயலப் இணைய இணைப்புக்கள் ,நிலையான கேபிள் தொலைபேசி இணைப்புக்களுக்கான ADSL இணைய இணைப்புக்கள்(Broad band) மற்றும் டயலொக் நிறுவனத்தின் Broad band இணைப்புக்கள்,மொபைல் ஊடான GPRS,3G இணைய இணைப்புக்களினை பட்டியலிடலாம்.
சிறீலங்கா ரெலிகொம்மினது ஏ.டி.எஸ்.எல் Broad band மற்றும் டயலொக் நிறுவனத்தின் Broad band இணைப்புக்கள் மட்டுப்படுத்தப்படாத நிபந்தனையற்றபாவனைக்கு மாதாந்த கட்டணம் அறவிடுகின்றன இவை சாதாரண மக்களுக்கு சற்று செலவாக உள்ளது. கூடிய இணையப்பாவனை மற்றும் வர்த்தக சேவைகளுக்கு பொருத்தமானவையாக உள்ளன.

செலவு ஒப்பீடுகளின் முடிவாக சிறீலங்கா ரெலிகொம்மினது சீ.டி.எம்.ஏ தொலைபேசி இணைப்புக்களில் இணையபாவனை உள்ள தொலைபேசிகளுக்கான தேவை தற்போது வாடிக்ககையாளரிடத்தில் கூடுதலாக எழுந்துள்ளதால் இவற்றினை பெருமளவில் தருவிப்பதற்கான முயற்சியில் சிறீலங்கா ரெலிகொம் ஈடுபட்டிருப்பதாகவும் இம்மாத இறுதியில் அவற்றினை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் என சிறீலங்கா ரெலிகொம் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. எது எப்படியிருந்த போதிலும் ADSL இணைய இணைப்புக்கள்(Broad band) மற்றும் WiMax Borad Band இணைய இணைப்புக்களை பெறுவதில் பயனாளர்கள் முனைப்பாக உள்ளனர்.

1 Responses to யாழில் இன்ரநெற் மற்றும் தொலைபேசி சேவைகள் மேம்படுகின்றன!

  1. manjoorraja Says:
  2. நல்லதொரு தகவல். யாழ் மக்களுக்கு மேலும் அதிக வசதிகள் குறைந்த செலவில் கிடைக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என தோன்றுகிறது.

     

கருத்துரையிடுக