"நான் இதை நம்பத்தயாராக இல்லை. சுனாமி வந்த பின்பு தான் நமக்கு சுனாமி என்றால் என்ன என்பதே தெரியவந்தது. அதன் பிறகு ஒவ்வொருமாதமும் சுனாமி வதந்திகள் அது போலத்தான் நிசா சூறாவளி பீதிகளும் வெருண்டவன் கண்ணுக்கு அருண்டதெல்லாம் பேய் என்று சொல்வார்கள் இதுபோலத்தான் இதுவும் இப்படி எச்சரிக்கை தருவதாக இருந்தால் நிசா வரமுதலே சொல்லியிருக்கலாமே!"
இப்படி எனது கருத்தை ஃபேஸ்புக்கில் நண்பா் ஒருவரின் சூறாவளி எதிர்வு கூறலுக்கு பதிலாக வழங்கியிருக்கிறேன். இந்தக்கருத்தை ஏற்கனவே பதிவு செய்ய எண்ணினேன் இப்போது பதிகிறேன் நான் பொதுவாக எதிர்வு கூறல்களை மறுக்கின்றேன் இந்த உலகம் அழியப்போகிறது என்று பலவாறான எதிர்வு கூறல்கள் கூறப்பட்டன. இது வரை எதுவும் நடைபெறவில்லை. நாம் வாழ்வது அறிவியல் முன்னேற்றம் அடைந்த உலகில் என்பதை மனதில் கொள்ளவேண்டும் நாம் எதிர்பாராமல் பல நடந்தேறிவிட்டன இவற்றை யாரும் எதிர்வு கூறினார்களா அதற்கான தடுப்பு ஏதும் செய்யமுடிந்ததா? ஆயினும் சில விடயங்களை நமது அறிவியல் சாதித்திருக்கிறது எம்முலகை மோத வந்த வால் நட்சத்திரத்தை விண்ணிலேயே கபளீகரம் செய்த அமரிக்க ஏவுகணை தாக்குதலை இதற்கு உதாரணமாக கூறலாம்.
அணுகுண்டுத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத்தான் தெரியும் அதன் தாக்கம் அவர்களிடம் போய் இன்னொருமறை உங்கள் மீது அணுகுண்டு போடப்போகிறார்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும்? நிச்சயம் இரண்டு மடங்கு கலக்கமடைவார்கள் தான்.இது போலத்தான் சாதாரணமாக சூறாவளி மழை பற்றி அன்றாடம் விடுக்கப்படும் எச்சரிக்கைகள் யாவும் சுனாமி புகம்பம் நிசா வகை சூறாவளிக்கான எதிர்வு கூறல்களாக மாறிவிடுகின்றன. முன்பு சாதாரணமாக விடுக்கப்படுகின்ற எச்சரிக்கைகளை அசட்டை செய்வதில்லை இப்போது சிறு மழைக்கான எச்சரிக்கைகளும் பருவமழை பருவக்காற்றுக்களும் சுனாமிக்கான எதிர்வு கூறல்களாகிவிடுகின்றன.
நமது ஆசியநாடுகளில் சமய நம்பிக்கை சம்பிரதாயங்களில் மக்கள் கூடிய நம்பிக்கை வைப்பதை பலருடய வாய்க்கரிசியாகிவிடுகிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் பகுத்தறிந்து உண்மையான தகவல்களை பரப்புரை செய்யவேண்டும் இதுவிடயத்தில் அதிகாரிகளும் ஊடகங்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் தமது பெயா்கள் ஊடகங்களில் அடிபடவேண்டும் என்பதற்காக உணா்வு புர்வ தகவல்களை வெளியிடக்கூடாது சரியான விளக்கத்தினை வழங்கவேண்டும்.நவம்பர் 26 இல் விசியது 80கிமீ வேக சூறாவளி ஈனால் இப்போது எதிர்பார்க்கப்படுவது 50-60 மட்டுமே URL: http://www.meteo.slt.lk
யாழ்ப்பாணத்தில் யாரோ சொல்லிவிட்டார்கள் வரும் 12ம் திகதி மீண்டும் வெள்ளப்பெருக்கு வரும் என்று அவ்வளவுதான் பலர் அழுக்கு நீரால் நிரம்பிய தமது கிணறுகளை இறைக்காமல் காத்திருக்கிறரா்கள் நம்ம சனம் எல்லாத்துக்கும் கணக்கு பார்க்கிறதுகள் என்பது யாவரும் அறிந்ததே. (எமது கிணறு வெள்ளநீர் புகுந்த காரணத்தினால் 4 இயந்திரம் கொண்டு இறைக்க 4000 ரூபா செலவானது)
எனவே நான்சொல்வது என்னவென்றால் சும்மாதானும் பிழையான செய்திகள் பரவுவதற்கு ஊடகமாக இருக்கக்கூடாது என்பததான் இது அந்த நண்பருக்கு எதிரான கருத்தல்ல நண்பர் ஊடகத்ததில் படித்த செய்தியினைத்தான் சொல்லியிருந்தார். ஊடகம் செய்தியை வெளியிட்ட விதம் தான் பிழையாக இருக்கக்கூடும் அல்லது மக்களின் பீதியின் வெளிப்பாடாக இருக்கலாம்..
இலங்கை மக்களே நீங்கள் வானிலை எதிர்வு கூறல் சம்பந்தமான தகவல்களை அரசாங்க வானிலை அவதானிப்பு நிலைய இணையத்தளத்தில் பார்வையிடலாம் URL: http://www.meteo.slt.lk
0 comments