"நான் இதை நம்பத்தயாராக இல்லை. சுனாமி வந்த பின்பு தான் நமக்கு சுனாமி என்றால் என்ன என்பதே தெரியவந்தது. அதன் பிறகு ஒவ்வொருமாதமும் சுனாமி வதந்திகள் அது போலத்தான் நிசா சூறாவளி பீதிகளும் வெருண்டவன் கண்ணுக்கு அருண்டதெல்லாம் பேய் என்று சொல்வார்கள் இதுபோலத்தான் இதுவும் இப்படி எச்சரிக்கை தருவதாக இருந்தால் நிசா வரமுதலே சொல்லியிருக்கலாமே!"இப்படி எனது கருத்தை ஃபேஸ்புக்கில் நண்பா் ஒருவரின் சூறாவளி எதிர்வு கூறலுக்கு பதிலாக வழங்கியிருக்கிறேன். இந்தக்கருத்தை ஏற்கனவே பதிவு செய்ய எண்ணினேன் இப்போது பதிகிறேன் நான் பொதுவாக எதிர்வு கூறல்களை...
மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில் நீயோ இங்கு வருவதில்லை...என்ற பாடல் வரிகள் தான் எனக்கு இதை எழுத முனையும் போது தோன்றுகின்றது. ஆம் நவம்பர் 26 அதிகாலை எனது இளைய தங்கை விழித்து அண்ணா! நிலத்தை கொஞ்சம் தொட்டுப்பார் என கூற சலிப்புடன் நித்திரை கலக்கத்துடன் கட்டிலிருந்தவாறே கையினை நிலத்தில் விட்டேன் அதிர்ந்து விட்டேன் அறைக்குள் வெள்ளம். சுதாரித்து எழுந்து காலை ஊன்றினேன் தட்டுத்தடுமாறி வெளியே வந்து பார்த்தேன் அந்தோ பரிதாபம் வீடெல்லாம் வெள்ளம். வீட்டுக்குள் வெள்ளம் என்று எழுத்துக்களில் கேள்விப்பட்டிருக்கிறேன் படங்களில் பார்த்திருக்கின்றேன்...