வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

நேற்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் முகாமில் இருந்து விடுவிக்கப்பட மாணவர்களுக்கு நிதிசேகரிக்கவந்தனர்.அவர்களுடைய தற்போதைய சேவை வரவேற்கத்தக்கதே. தாம் பலரிடம் வேண்டியும் சரிவராதகாரணத்தினால் பல்கலைச்சமூகத்திடமே உதவிகேட்க வந்திருப்பதாக தமது வேண்டுகோள்கடிததத்தில் குறிப்பிட்டிருந்தனர்.இவர்களின் தன்னார்வ முயற்சியை மெச்சுகிறேன். அவ்வாறான செயற்பாடுகள் தொடரவேண்டும்.வெறுமனே பணஉதவி மட்டுமல்ல உளவியல் சரீர ரீதியான உதவிகளும் வழங்கலாம்

என்னால் ஆன பங்களிப்பினை நான் வழங்கினேன் . இவ்வேளை எனக்கு பழைய ஞாபங்கள் வந்து மின்னின.


பல்கலைமாணவர்களின் கடந்தகால நடவடிக்கைகள் குறிப்பாக யுத்த காலத்தில் எவ்வாறிருந்தன என்பதை நாம் அறிவோம் பொங்குதமிழ் நிகழ்விற்கு பின்னரான நடவடிக்ககைகள் எதுவும் பெரும்பாலும் வரவேற்கப்படக்கூடியதாக இருக்கவில்லை.

இங்கு ஒன்றை நான் குறிப்பிடவேண்டும் அச்சுறுத்தல் நிலவியதால் அவர்களால் எதுவும் செய்யமுடியாமல் போனது உண்மை ஆனால் கேளிக்கைகளை நிறுத்தியிருக்கலாம். இப்படிக்கூறுவதன் ஊடாக நான் அவர்கள் செய்த செய்து கொண்டிருக்கின்ற உணர்வுபூர்வமான பல நிகழ்வுகளை தியாகங்களை கொச்சைப்படுத்தமுடியாது. ஏன் அவர்கள் மே 18 கைலாசபதிகலையரங்கில் அமைதியான அஞ்சலி நிகழ்வை ஏற்பாடுசெய்திருந்தனா் இது வரவேற்கக்கூடிய நிகழ்வு. ஆயினும் அவர்கள் செய்த தவறுகளையும் மறுக்கமுடியாது

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் மாணவர் பிரிவுகள் செய்யும் நிகழ்வுகளுக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்பது யாவரும் அறிந்தது எனவே நான் ஒன்றியத்தினைக்கேட்கவில்லை ஒட்டுமொத்த மாணவர்களையும் கேட்கிறேன்

தற்போது முகாம் மாணவர்கள் படிப்படியாக விடுவிக்கப்டுகின்றனர் எனவே தாம் (அல்லது மூத்த வெளியேறிய மாணவர்கள்) செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாக இவ்வருடம் நடத்தவுள்ள கேளிக்கை நிகழ்வுகளை (கோயிங் டவுண்,வெல்கம் பார்ட்டி) நிறுத்திவைத்து அதற்கு செலவழிக்க மாணவர்களிடம் அவ்வப்பபோது அறவிடப்படப்போகின்ற பணநன்கொடைகளை சேமித்து அவ்வப்போது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வரவார்களா? அப்படிச்செய்தால் இவர்களது இச்சேவை மேலும் புனிதமடையும்

யாழ் பல்கலைக்கழக மாணவரின் நிகழ்வுகள் தொடர்பாக அக்காலத்தில் உள்ளுர் பத்திரிகையில் காட்டமான கட்டுரை வெளிவந்திருந்தது.பலருக்குதெரியும்

அது தொடர்பாக எனது வலைப்பதிவில் கூட ஒருபதிவை இட்டிருந்தேன். கொத்தக்கொத்ததாக மக்கள் இறந்துகொண்டிருந்தவேளையிலும் கோயிங்டவுண் நிகழ்வுகளுக்கு கொலுசு கட்டிசென்றவர்களும் இன்று இங்கே Face book இல் எனது நண்பர்களாக இருக்கிறார்கள் நான் ஒருபோதும் மன்னிக்கமாட்டேன்.பிழையினை நண்பன்செய்தாலும் நான்செய்தாலும் பிழைதான். அதை உணர்ந்தால் அது வரவேற்கத்தக்கது.

புதியபாதையில் மாணவர்கள் தமது உறவுகளை அரவணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது ஓரளவுக்கு நிம்மதி தருகிறது