கடந்த வாரம் இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழகமாணவர் பிரச்சனை தொடர்பான பதிவு ஒன்று மாணவர்களிடையே குழப்பத்தினை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றது என நான் கருதுகின்றேன். பலர் பல்கலைக்கழகத்தினை தமது தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்துவதற்காக மறைமுகமாக தொழிற்படுகையில்அதற்கு இப்பதிவு துணைபோவதாகவே படுகிறதுகல்விக்கு ஒழுக்கம் பேணப்படவேண்டியது முக்கியம்எங்கு தவறு நிகழ்ந்தாலும் தண்டணை வழங்கப்படவேண்டும் என்பதும் அவை தட்டிக்கழிக்கப்படக்கூடாது என்பதும் முக்கியம் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இதில் யாரும் விதிவிலக்கல்ல. மாணவர்களுக்கு...