வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.
வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் வேலையில்லா பிரச்சனை முக்கிய பிரச்சனையாக உள்ளது. தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பாரம்பரிய வேலைகளுக்கான கேள்வி குறைந்து தொழில்நுட்பங்கள் அந்த இடத்தை பிடித்துக்கொண்டதால் பாரம்பரிய வேலைவாய்ப்புக்கள் மேலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக  தொழில்நுட்பத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைவாய்ப்புக்கள் திறந்து விடப்பட்டிருக்கின்றது.இந்த நிலையில் உண்மையில் வேலைவாய்ப்புக்களுக்குரிய தகுதி வாய்ந்த...