வடக்கு கிழக்கில் மக்களின் வாழ்வாதாரம்அபிவிருத்தி கல்வி மேம்பாடு போன்ற வற்றில் அக்கறை செலுத்தும் புலம்பெயர் உறவுகளில் பெரும்பாலானவர்கள் குறுகிய கால நன்மை தரக்கூடிய உதவிகளில் தான் நிறைய பங்களிப்பனை செய்து வருவதை அவதானிக்க முடிகிறது. மாணவருக்கு பயிற்சிக்கொப்பி ,விதைவைக்கு உதவிப்பணம் வாங்கிக்கொடுப்பதில் ஆரம்பிக்கிறது அவர்களின் உதவி.
உதவி தேவையானவர்களைவிட வழங்குதற்காக முளைத்துள்ள உள்ளுர் உதவி வழங்கும் நிறுவனங்கள் , இணையத்தளங்களின் எண்ணிக்கை அதிகம். புலம்பெயர்ந்தவர்கள் நீண்டகால நோக்கிலான உதவிகளை செய்வதே நல்லது. குறித்த உதவி...