வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.
நேற்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் முகாமில் இருந்து விடுவிக்கப்பட மாணவர்களுக்கு நிதிசேகரிக்கவந்தனர்.அவர்களுடைய தற்போதைய சேவை வரவேற்கத்தக்கதே. தாம் பலரிடம் வேண்டியும் சரிவராதகாரணத்தினால் பல்கலைச்சமூகத்திடமே உதவிகேட்க வந்திருப்பதாக தமது வேண்டுகோள்கடிததத்தில் குறிப்பிட்டிருந்தனர்.இவர்களின் தன்னார்வ முயற்சியை மெச்சுகிறேன். அவ்வாறான செயற்பாடுகள் தொடரவேண்டும்.வெறுமனே பணஉதவி மட்டுமல்ல உளவியல் சரீர ரீதியான உதவிகளும் வழங்கலாம்என்னால் ஆன பங்களிப்பினை நான் வழங்கினேன் . இவ்வேளை எனக்கு பழைய ஞாபங்கள் வந்து மின்னின. பல்கலைமாணவர்களின்...